மலையாள சினிமாவை பார்த்து தமிழ் சினிமா துறையினர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இதற்கு முன்பு பல உதாரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இந்த அளவுக்கு மோசமாக மலையாள சினிமா நடிகர்கள் நடந்து கொள்வார்களா என்று காரி துப்பும் வகையில் அமைந்துள்ளது ஹேமா அறிக்கை. கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு மலையாள நடிகையை பிரபல ஒரு மலையாள நடிகர ஆட்கள் கூட்டாக சேர்ந்து கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் இந்த நாட்டையே நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு பல நடிகைகள் மலையாள சினிமாவில் இருக்கும் நடிகர்களால் இயக்குனர்களால் நாங்கள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளோம் என்கின்ற புகார் வழுத்தத்தை தொடர்ந்து இதற்காக நடிகைகளை பாதுகாக்கும் ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டது. இருந்தாலும் இது நீதிமன்றம் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஹேமா தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் அறிக்கை வெளியிடப்படாமலேயே இருந்த நிலையில் தங்கலான் படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதி முதல் முதலில் இந்த அறிக்கையை வெளியிடாததற்கு காரணம் என்ன.? யாரை பாதுகாக்க இந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிடவில்லை என குரல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பல நடிகைகள் தொடர்ந்து ஹேமா அறிக்கையை வெளியிட வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து சுமார் 250 பக்கம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சினிமா துறையைச் சார்ந்த 15 ஆண்கள், அதாவது இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முன்னணியில் இருக்கும் மலையாள சினிமா துறையைச் சார்ந்த 15 ஆண்கள் அதில் 5 டாப் நடிகர்கள் உட்பட இவர்களால் தான் பல நடிகைகள் பாதிப்புக்கு உள்ளானதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நடிகையாக மலையாள சினிமா துறையில் நடிகர்கள் மீது புகார் தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒரு நடிகை எங்களை படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தால் நாங்கள் படத்திலே கமிட்டாகி இருக்க மாட்டோம். ஆனால் படத்தில் கமிட் ஆன பின்பு நடிகர் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைப்பதும், அதற்கு நான் மறுத்துவிட்டேன்.
ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் கட்டிப்பிடிப்பது போன்ற ஒரு காட்சியில் வேண்டுமென்றே தவறாக கட்டிப்பிடித்து ரீ டேக் வாங்கிக் கொண்டே இருந்தார் அந்த நடிகர். ஒவ்வொரு முறையும் நடிக்கும் போது என்னை தவறான இடங்களில் தொட்டு மிகப்பெரிய அளவில் தொந்தரவு கொடுத்தார். இப்படி 17 முறை ரீ டேக் ஆனது இயக்குனர் என் மீது தவறு உள்ளது போன்று என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து மிக கடுமையாக தீட்டினார் என்று ஹேமா அறிக்கை வெளியான பின்பு பல நடிகைகள் இப்படி தொடர்ந்து தாங்கள் பாதிப்புக்குள்ளானது பற்றி தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விரைவில் எந்த டாப் 5 நடிகர்கள் இந்த ஹேமா அறிக்கையில் சிக்கி இருக்கிறார்கள். என்கின்ற விவரம் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்படி வெளியானால் நிச்சயம் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கேரள மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். காரணம் கேரளாவில் மக்கள் சினிமா பின்னால் போவர்கள் கிடையாது, அந்த வகையில் படித்த மாநிலமான கேரளாவில் இது போன்ற ஒரு நிகழ்வை அந்த மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அந்த வகையில் இந்த குற்றச்சாட்டில் எந்த நடிகர் சிக்கினாலும் சட்டப்படி தண்டிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.