ஓ.. இதுக்கு தான் சமந்தா உட்பட பல நடிகைகள் ஈஷாவுக்கு போகிறார்களா.? போட்டுடைத்த பயில்வான்..

0
Follow on Google News

நடிகை சமந்தா, தமன்னா போன்ற பிரபல நடிகைகள் அவ்வப்போது கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுவதுடன் இது தொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறு சினிமா நடிகைகள் அடிக்கடி ஈஷா யோகா மையத்திற்கு ஆர்வத்துடன் செல்வதற்கு காரணம் என்ன என்பது பற்றியும், அந்த மையத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு,மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சினிமாவில் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் சமந்தாவுக்கு ஆன்மீகம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதனாலேயே ஒவ்வொரு வருடம் மகா சிவராத்திரிக்கும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்திற்கு சென்று பிரார்த்தனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அண்மையில் கூட ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டிருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். மேலும் அவரது பதிவில், “ஒரு நல்ல குரு கிடைப்பது வரம், அதிலும் உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பார்வை கொண்ட குரு கிடைப்பது அதிர்ஷ்டம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படியான நிலையில், சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் ஈஷா யோகா மையம் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “நடிகைகள் சமந்தா, கங்கநா தனாவத் போன்றோர் நிம்மதி தேடி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு செல்கின்றனர்.

ஒருவர் தியானம் செய்யும் போது அவரது மனதில் உள்ள அழுக்கு நீங்கி விடுகிறது. எப்போதும் சிக்கல் பிரச்சனை என்று வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கும் பலர் நிம்மதி தரும் இடத்தை தேடி நாடி செல்கிறார்கள். அப்படி செல்லும் இடம்தான் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம். மேலும் தொடர்ந்து பேசிய பயில்வான், மூன்று முறை ஈஷா யோகா மையத்திற்கு சென்றிருப்பதாகவும், அங்கு ஒரு நல்ல வைப்ரேஷன் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “நானும் ஆன்மீகவாதி தான். என்னிடம் இறை நம்பிக்கை உண்டு. ஆனால் மூடநம்பிக்கை கிடையாது.நான் ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் போது, அங்கே ஏதாவது தவறு நடக்கும், அதைப் பற்றி வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தலாம் என்று ஒரு யூ டியூப் வியாபாரி ஆகத்தான் சென்றேன்.

ஆனால் நான் உள்ளே சென்ற ஐந்து நிமிடத்திற்க்குள் என் மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்பட்டது.” என்று ஈஷா யோகா மையத்தில் அவர்கள் கிடைத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், “மையத்திற்கு உள்ளே சென்ற உடனே நம்மை குளிக்க வைத்து அங்கு இருக்கும் சிவலிங்கத்தை தொட வைக்கிறார்கள். அப்படி செய்யும்போது உடல் அழுக்கு மன அழுத்தம் இரண்டுமே போய் விடுகிறது.

அதன் பிறகு ஆறு மணிக்கு எந்த ஒரு உருவமும் இல்லாத இடத்தில் தியானம் செய்ய சொல்கிறார்கள்.அந்த சமயத்தில், மனதிற்குள் ஒரு ஒளி பாய்ச்சப்படுவதை உணர்ந்தேன்.மேலும் அங்கு என்னை இல்லாமல் சமைக்கப்படும் இயற்கையான உணவு குழம்பை உண்பதற்கு வழங்குகிறார்கள்.அதன் பிறகு அங்கிருக்கும் பிரம்மாண்ட சிவன் சிலைக்கு முன்பு சிவபுராணம் அரங்கேற்றப்படுகிறது.அந்த சமயத்தின் பக்தர்கள் அனைவரும் வேறொரு உலகத்திற்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்று கூறலாம்” என்று ஈஷா யோகா மையம் குறித்து ரயில்வான் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய பயில்வான், ” நான் இப்போது இது பற்றி பேசுவதற்கு காரணம், அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்த சமந்தா அண்மையில் ஈஷா யோகா மையத்தில் வந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அதேபோல் நடிகை கங்கனா ரணவத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். இப்படி நடிகைகள் ஈஷா யோகா மையத்தை தேடி செல்வதற்கு காரணம் மன நிம்மதி வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here