800 கோடியா… முதியோர் இல்லத்திற்கு வரலஷ்மி திருமணத்திற்கு செய்த ஆச்சரியமூட்டும் செயல்…

0
Follow on Google News

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி திருமணம் கோலாலமாக முடிந்துள்ளது. அம்பானி வீட்டு திருமணத்திற்கு இணையாக இல்லை என்றாலும் கூட, தென்னிந்தியாவில் சினிமா துறையினர் இதுவரையும் யாரும் இது போன்ற பிரம்மாண்ட திருமணத்தை நடத்தியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது வரலட்சுமி சரத்குமாரின் திருமணம்.

தாய்லாந்தில் உள்ள பாலி என்கின்ற ஒரு தீவில் இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பங்கேற்ற வரலட்சுமி திருமணம், அதன் பின்பு சென்னை லீலா பேலஸில் வரவேற்பு என பல கோடி ரூபாய் வரை வரலட்சுமியின் திருமண செலவு ஆகியுள்ளது என்று கூறப்படுகிறது. சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சினிமா துறையைச் சார்ந்த அனைத்து நடிகர்களுக்கும் நிக்கோலோஸ் தரப்பிலிருந்து சொகுசு கார்கள் அனுப்பி அவர்களை அழைத்து வந்து மீண்டும் விமான நிலையத்தில் டிராப் செய்வது, அவர்கள் வீட்டில் டிராப் செய்வது என விலை உயர்ந்த கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் தேவையான சொகுசு கார்கள் இல்லாததால் வெளி மாநிலங்களில் ரோல்ஸ் ராயல்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து சிறப்பு அழைப்பாளர்களை தன்னுடைய திருமணத்திற்கு வருவதற்கு அந்த காரை பயன்படுத்தி உள்ளார் நிக்கோலோஸ். இந்த நிலையில் லீலா பேலஸில் நடந்த வரவேற்பு நிகழ்வில் வந்த அனைத்து விருந்தாளிகளையும் ராதிகா முன்னின்று வரவேர்த்த நிலையில்.

எங்கே வரலட்சுமி அம்மா சாயா தேவி , ஒருவேளை சாயாதேவி கோவித்துக் கொண்டு வரவில்லையா என்று கூட ஒரு புரளி கிளம்பியது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் தாய்லாந்தில் நடந்த வரலட்சுமி திருமணத்தை முன் நின்று அனைத்து வேலைகளும் செய்தது சாயா தேவி தான் என்றும், லீலா பேலஸில் நடந்த நிகழ்வுக்கு வந்த சினிமா துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் ராதிகா சரத்குமாருக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் ராதிகாவே முன் நின்று வரவேற்பது தான் சரி சரியாக இருக்கும் என்பதால் தான் ராதிகா அனைத்து விருந்தாளிகளையும் வரவேற்றார்.

இதனால் எந்த ஒரு சர்ச்சையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது, அதே நேரத்தில் நிக்கோலஸ் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது தெரியவந்தது, சுமார் 900 கோடிகள் ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட நிக்கோலஸ் மிக மும்பையில் முக்கிய தொழிலதிபதிகளில் ஒருவராக இருந்து வருவதாக கூறப்படுகிறது அவருடைய பொழுதுபோக்காக அவர் உடற்பயிற்சியை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நிக்கோலஸ் வரலட்சுமி திருமண நிகழ்வு வரவேற்பு நிகழ்வு நடைபெற்ற லீலா பேலஸ் ஹோட்டலில் மினிமம் சாதாரண உணவே ஒரு பிளேட் 3000 ரூபாயிலிருந்து 3500 இருக்கும் என்றும், அந்த வகையில் பல வகையான உணவுகள் அங்கே வந்து விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதால் குறைந்தது 6000-ல் இருந்து 6500 வரை ஒரு பிளேட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இதில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு செயலை வரலட்சுமி செய்துள்ளார் அவர் ஏற்கனவே சேவ சக்தி என்று ஒரு சேவை மையத்தை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பொதுவாக திருமண நிகழ்வில் மிச்சமாகும் உணவுகளை முதியோர் இல்லங்கள் அனாதை இல்லங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

ஆனால் வரலட்சுமி அப்படி மிச்சமான உணவுகளை முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கும் அனுப்பக்கூடாது. இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் விருந்தினர்கள் என்ன உணவு உண்கிறார்களோ. அதை சமைத்து சுடச்சுட முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்றவர்கள் இல்லங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று வரலட்சுமி சரத்குமார் விருப்பத்தை அவருடைய கணவர் நிக்கோலஸ் நிறைவேற்றியது பலரது பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திருமணத்திற்கு சுமார் 100 கோடி வரை செலவானது என்றும், மொத்த செலவையும் நிக்கோலஸ் ஏற்று கொண்டார் என கூறப்படுகிறது.