எனது அப்பாவுக்கு அவர் இரண்டாவது… அவ்வளவு தான்… ராதிகா குறித்து தடாலடியாக தெரிவித்த வரலட்சுமி..

0
Follow on Google News

நடிகை ராதிகா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து மூன்றாவது முறையாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார், சரத்குமார் – ராதிகா தம்பதியினருக்கு ராகுல் என்கிற பையன் உள்ளார், இவர் சிங்கப்பூரில் சினிமா துறை தொடர்பான படிப்பை படித்து முடித்துள்ளார், ராதிகாவுக்கு அவரது இரண்டாவது கணவருக்கு பிறந்த ஒரு பெண், மற்றும் சரத்குமார் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண் ஆக இவர்கள் அனைவரும் அடிக்கடி ஒன்றாக சந்தித்து கொள்வது வழக்கம்.

பொதுவாக சரத்குமார் முதல் மனைவியை விட்டு பிரிந்தாலும், முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண் பிள்ளைகள் மீது பாசத்துடன் தான் இருந்து வருகிறார், அதே போன்று ராதிகா தனது கணவர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி உடன் நெருங்கி பழக கூடியவர், அதே போன்று வரலக்ஷ்மியும் தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவியான ராதிகாவுடன் நல்ல நட்புடன் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் வரலக்ஷ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் ராதிகாவை அம்மா என அழைக்கமாட்டேன் என தடாலடியாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், மக்கள் எதுவேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம், பலர் என்னுடைய தயார் ராதிகா என்று நினைத்து கொன்டு என்னிடம் கேட்கின்றனர். ஆனால் என்னுடைய தாயார் ராதிகா கிடையாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ராதிகா என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி மட்டும் தான். அதற்காக நான் ராதிகா ஆண்ட்டியை வெறுத்து ஒதுக்குகிறேன் என்பது அர்த்தம் கிடையாது. எனக்கும் ராதிகா ஆண்ட்டிக்கும் நல்ல நட்பு உள்ளது, நான் அவரை ஆண்ட்டி என்றே அழைத்து வருகிறேன். சிலர் என்னிடம் ஏன் ஆண்ட்டி என அழைக்கிறாய் என கேட்கிறார்கள். உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். என்னை பெற்றவர் மட்டுமே எனக்கு தாய். அவரை மட்டும் தான் அம்மா என்று அழைக்க முடியும்.

மேலும் என்னுடைய உண்மையான அம்மாவே எனக்கு அம்மா. அதனால் எப்போதுமே எனக்கு ராதிகா ஆண்ட்டி தான். ஆனால் எனது அம்மாவையம் ராதிகா ஆண்ட்டியையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன். சம அளவில்தான் மதிக்கிறேன். என நடிகர் சரத்குமார் முதல் மனைவிக்கு பிறந்த நடிகை வரலட்சுமி தன்னுடைய தந்தை சரத்குமார் இரண்டாவது மனைவி ராதிகா குறித்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தந்தையை போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றிய லதா…..ரஜினி என்ன செய்தார் தெரியுமா.?