விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.
இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். வத்திக்குச்சி வனிதா என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும், அவராலே பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியில் கலக்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா. அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஷயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
முக்கியமாக வனிதா விஜயகுமாரின் நடிப்புக்கும் ரசிகர்களிடையே டீசண்ட்டான வரவேற்பே கிடைத்தது. மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதன்பின், குக் வித் கோமாளி கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே வனிதாவுக்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிகப்பெரிய சண்டே நடந்தது. இதனால் வனிதாவை அவருடைய தந்தை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விட்டார்.
பின் தன்னுடைய மகன் தனக்கே வேண்டும் என்று ஏர்போட்டில் வனிதா மிகப்பெரிய அளவில் தந்தை விஜய்குமாரிடம் சண்டையிட்டார். இப்படி வனிதாவுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் மஞ்சுளாவே பேட்டியில், வனிதா என்னுடைய மகளே கிடையாது. அவள் ஒரு ராட்சசி. இந்த வயிற்றில் பெற்றதை நினைத்து வருத்தப்படுகிறேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.
அதற்குப் பிறகு வனிதா தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா, ஏர்போர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு பிறகு என்னை என்னுடைய அம்மா மஞ்சுளா வீட்டிற்கு வரச் சொன்னார். வீட்டிற்கு சென்று வீட்டிற்கு என்னுடைய தந்தையின் காலில் விழுது அழுது மன்னிப்பு கேட்டேன். அதற்கு பின் ஆலப்பாக்கம் வீட்டின் மாடியில் என்னுடைய அம்மா இருந்தார்.
நான் அதே வீட்டில் கீழ் தளத்தில் என் மகன், மகள்களோடு இருந்தேன். என்னுடைய அம்மாவிற்கு குடிப்பழக்கம் இருந்தது. அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலையும் வந்தது. இருந்தாலும் அவர் அந்த குடிப்பழக்கத்தையே நிறுத்தவே இல்லை. அம்மா ரொம்ப கிரிட்டிக்கல் நிலையில் தான் ஐசியூவில் இருந்தார். மருத்துவர்களும் 72 மணி நேரத்தில் அம்மா இறந்து விடுவார் என்று சொல்லிவிட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் அம்மா சில விஷயங்களை சொன்னார். மேலும், இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். பின் என்னுடைய தந்தை விஜயகுமாரிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று சொன்னார். அதற்குப்பின் என்னுடைய அம்மா இறந்துவிட்டார்.
ஆனால், அவருடைய இறுதி சடங்கை கூட செய்ய என்னை அனுமதிக்கவில்லை. பின் சரத்குமாரும், ராதாரவியும் தான் என்னை முன்னாள் அழைத்து இறுதி சடங்குகளை செய்ய வைத்தனர். அவர்கள் இல்லை என்றால் என்னுடைய அம்மாவிற்கு என்னால் இறுதி சடங்குகளை செய்திருக்க முடியாது என கண்கலங்கினார் வனிதா விஜயகுமார்.