பிரிந்த பழைய காதலனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்… திரும்பவும் முதலில் இருந்தா.?

0
Follow on Google News

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார், சீரியல் நடிகர் ஆகாஷ் என்பவரை காதலில் திருமணம் செய்து கொண்டார், இவருக்கு இது தான் முதல் திருமணம். பின்பு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா விஜயகுமார், அதன் பின்பு ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அடுத்த சில ஆண்டுகளிலே இரண்டாவது கணவர் ராஜன் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜனை விட்டு பிரிந்தார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் முதல் கணவர் ஆகாஷை விட்டு பிரிந்த பின்பு, இரண்டாவது கணவர் ராஜனுடன் பழகுவதற்கு முன்பு, இந்த இடைப்பட்ட காலத்தில் அருண் என்கிற நபருடன் கிசு கிசுவில் சிக்கி வந்தார், ஆனால் ராஜனுடன் நெருங்கி பழகி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்பு ராஜனை விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா ராபர்ட் மாஸ்டர் உடன் கிசு கிசுவில் சிக்கினார்.

ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரும் பொது இடங்களுக்கு ஜோடியாக வலம் வருவது, வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சொல்வது, ரியாலிட்டி ஷோக்களில் ஜோடியாக கலந்து கொள்வதுமாக இருந்த ராபர்ட் மாஸ்டர் – வனிதா விஜயகுமார் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பே இருவரும் பிரிந்தனர்.

வனிதா – ராபர்ட் மாஸ்டர் இருவரும் காதலித்து வந்த போது வனிதா பெயரை ராபர்ட் மாஸ்டர் பச்சை குத்தியதும் பின்பு இருவருக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்த பின்பு, பச்சை குத்திய வனிதா பெயரை அளித்து விட்டார் ராபர்ட் மாஸ்டர். இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருந்த வனிதா வாழ்க்கையில் பீட்டர் என்கிற நபர் என்ட்ரி கொடுக்க, பீட்டரை காதலித்து முன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா.

மூன்றாவது திருமணம் நடந்த சில மாதங்களில், பீட்டர் பால் – வனிதா இருவருக்கு இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட பீட்டர் பாலை வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் வனிதா. இதனை தொடர்ந்து திருமணம் நடந்து சில மாதங்களில் இந்த தம்பதியினர் பிரிந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் உடல்நலக்குறைவால் காலமானார்.

பீட்டர் பால் இறந்த பின்பு, மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரிவித்த வனிதா, 2020 இல் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது. நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன் என விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய முன்னாள் காதல் ராபர்ட் மாஸ்டரோடு சினிமாவில் இணைந்து கதநாயகியாக நடிக்க இருக்கிறார் வனிதா, இந்த படத்தில் வனிதா மகள் ஜோவிகா தயாரிப்பு பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான சூட்டிங் பாங்காங்கில் தொடங்கி இருக்கிறது. படத்தின் பெயர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரும் சில வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தது குறித்து வனிதா பல நேர்காணலில் பேசியது குறிப்பிடதக்கது.