மூன்று திருமணம் செய்து சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாமல் பெயர் போனவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். தற்போது வனிதா விஜயகுமார் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். அப்பட டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் பவர் ஸ்டார் வனிதாவுடன் ஹனிமூன் செல்வது குறித்து பேசியது தான் இப்போது இணையத்தில் ஹாட்டாபிக்காக மாறியுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு கம்பேக் என்றே சொல்லலாம்.பிக் பாஸ் ஷோவிற்கு பிறகு பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு நடிகை வனிதாவுக்கு கிடைத்திருந்தது. இப்போது தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக மாறியிருக்கிறார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வரும் ஒன்பதாம் தேதியில் ரிலீஸ் ஆகும் ‘அந்தகன்’ படத்தில் கூட வனிதா நடித்திருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பவர் ஸ்டார் மற்றும் வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், 4 ஹார்ட்டின்கள் உடன் பவர் ஸ்டார் சீனிவாசனை டேக் செய்திருந்தார்.
வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் கழுத்தில் மாலையுடன் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், சிலர் வனிதா – பவர் ஸ்டார் சீனிவாசன் திருமணம் நிஜமா, இல்லை ஏதேனும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படமா என்று நம்ப முடியாமல் சந்தேகத்தையும் எழுப்பி இருந்தனர்.
ஆனால் அது அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிக்கப் படத்தின் போஸ்டர் என்பது பின்னர் உறுதியாகியிருந்தது. இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் பவர் ஸ்டாரும் கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய பவர்ஸ்டார் எனது தோழி வனிதாவை நீண்ட காலத்துக்கு பிறகு சந்திக்கிறேன் என்று கூறினார்.
உடனே பேச்சை இடைமறித்து வனிதா, “தோழியா…” இங்கு நமக்கு திருமணமே செய்து வைத்து விட்டார்கள். நான் வெளியூருக்கு செல்லும் போது நீங்கள் பவர்ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டீர்களா? என்று கேட்கிறார்கள். நானும் இல்லை, இல்லை நான் பவர் ஸ்டார் சீனிவாசனை தான் திருமணம் செய்திருக்கிறேன் என்று சொல்வேன். உங்களை திருமணம் செய்து ஒன்னும் நடக்கவில்லை என்றும் கலாய்த்தார்.
அதற்கு உடனே பவர் ஸ்டாரோ, என்ன செய்வது நீங்கள் தான் அடிக்கடி தாய்லாந்து சென்று விடுகிறீர்கள்! நானும் இங்கு இருப்பதில்லை! ஒரு நாள் ஹனிமூனுக்கு நாள் குறித்து விடலாம் என்று கூறினார். இருவரது இந்த கலகலப்பான உரையாடல் தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.