90களில் தமிழில் முன்னணி நடிகையாக இருந்து, பிரபு, மோகன், சத்யராஜ், கமல் ஆகியோருடன் நடித்தவர் ஊர்வசி. கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாக்கியராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.. ஊர்வசிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் இருவரும் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். 2008 ஆம் ஆண்டு மனோஜ் ஊர்வசியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் மனோஜின் கோரிக்கையை ஏற்று 2009 ஆம் ஆண்டு ஊர்வசிக்கு விவாகரத்து வழங்கியது.
பின் மகளை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஊர்வசி வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணையில் ஊர்வசி எப்போதும் மது போதையில் இருப்பவர் அவரை நம்பி மகளை எப்படி ஒப்படைப்பது? என கணவர் மனோஜ் குற்றம்சாட்டி இருந்தார். பிறகு முடிவில் தன்னுடைய மகள் தந்தை உடனே சென்று விட்டார். அதுமட்டும் இல்லாமல் ஊர்வசியின் சகோதரியும் நடிகையுமான கல்பனாவின் இறப்பு ஊர்வசியை வெகுவாக பாதித்து இருந்தது. இதனால் ஊர்வசி மன வேதனையில் இருந்தார்.
பின் நடிகர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஊர்வசியும் 2013 ஆம் ஆண்டு கட்டிட காண்ட்ராக்டர் சிவபிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஊர்வசி மிக வயதான நிலையில் மகனை பெற்று எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஊர்வசி பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில் தன் முதல் திருமண முறிவைப் பற்றி ஊர்வசி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “நாம் முதலில் மனோஜை திருமணம் செய்திருந்தேன். அது சிறிது நாளிலேயே முடிந்து விட்டது. அவர்கள் வீட்டில் அனைவரும் குடிப்பார்கள். அது மிகவும் சகஜம். எனக்கும் அவர் தினமும் ஊற்றிக் கொடுப்பார். குடித்து பழகிய நான் அதற்கு அடிமையாகி விட்டேன்.
அதுவே என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவும் அமைந்தது. அதனால் டிவோசும் ஆனது. என்னுடைய மகளையும் அதனால் இழந்தேன். இந்த பிரச்சனைகள் அனைத்தினாலும் மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு தான் எங்கள் குடும்ப நண்பர் சிவ பிரசாத்தை திருமணம் செய்தேன். அப்போது எனக்கு 40 வயது. எல்லோரும் 40 வயதில் திருமணமா என கேள்வி எழுப்பினார்கள்.
நான் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். திரைத்துறையில் நன்றாக இருந்தாலும் ஊர்வசிக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்னைகள் இருந்தன. குடிப்பழக்கம், விவாகரத்து போன்றவை அவரது வாழ்க்கையை பாதித்தன. இருப்பினும், ஊர்வசி தனது திறமையால் சினிமாவில் நிலைத்து இருக்கிறார்.