விஜயை டோட்டல் டேமேஜ் செய்ய திரிஷாவை வைத்து பலே திட்டம்… திரிஷா பின்னணியில் யார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவித்த பின்பு, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தும், மேலும் இந்த சம்பவத்துக்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து இருந்த நிலையில், நடிகர் விஜய்க்கும் திரிஷா குறித்த ஒக்கும் இடையிலான கிசுகிசு செய்திகள் றெக்கை கட்டி பறந்து வருகிறது.

மேலும் விஜய் குறித்த அந்த கிசுகிசு செய்திகளுக்கு தீனி போடும் வகையில் நடிகை திரிஷாவின் நடவடிக்கைகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நடிகை திரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையிலான கிசுகிசு செய்திகள் என்பது அவர்கள் கில்லி படத்தில் நடித்ததில் தொடங்கி தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது அது மிகப்பெரிய அளவில் விஜயின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் உலா வருவதற்கு காரணம் நடிகை திரிஷாவை வைத்து விஜயை காலி செய்ய போடும் திட்டமா என்கின்ற விவாதமும் தற்போது அரங்கேறியுள்ளது.

நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு வாங்கிக் கொண்டிருப்பதால், அவர் அவ்வளவு எளிதாக சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர மாட்டார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தமிழக வெற்றி கழகம் என அதிரடியாக தன்னுடைய கட்சி பெயரை அறிவித்து, 2026 சட்டசபை தேர்தலை சந்திப்போம் என அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார் விஜய்.

ஆனால் நடிகர் விஜய் அறிக்கை விட்டதோடு சினிமாவில் கவனம் செலுத்துவார், களத்திற்கு வர மாட்டார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் களத்தில் இறங்கி அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் விஜய் நடந்து கொண்டது, என்னடா இதை சும்மா விட கூடாதே, ஆரம்பத்திலே தட்டி வைக்கணுமே என விஜய் அரசியல் வருகையை விரும்பாத அரசியல் கட்சிகள் செய்த வேலை தான் திரிஷா விவகாரம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரியை காலி செய்ய தற்பொழுது திரிஷா விவகாரத்தை சில அரசியல் கட்சிகள் பின்னின்று பரபரப்பாக்கி வருவதாக கூறப்படுகிறது, குறிப்பாக ஒரு நடிகையுடன் நடிகை இணைத்து வைத்து பேசுவது பெரிய விவகாரம் அல்ல, காரணம் இதற்கு முன்பு எம்ஜிஆர் அரசியல் கட்சி தொடங்கியதும் அவருடன் ஜெயலலிதாவை இணைத்து வைத்து பலரும் பலவிதமாக பேசினார்கள்.

ஆனால் எம்ஜிஆர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய கட்சியிலேயே ஜெயலலிதாவை இணைத்து தன்னுடைய அரசியல் வாரிசாகவே வளர்த்தெடுத்தார், எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு ஜெயலலிதா முதல்வரானது அது தனி கதை, அந்த விதத்தில் எம்ஜிர்ையும் ஜெயலலிதாவையும் ஏற்றுக் கொண்ட மக்கள் விஜயும் திரிஷாவையும் ஏற்றுக் கொள்வார்களா.? அல்லது விஜய் இதுபோன்ற செய்திகளை கடந்து அரசியலில் விஜய் வெற்றி பெறுவாரா என்கின்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.?

காரணம் தற்பொழுது கிளம்பியுள்ள திரிஷா – விஜய் விவகாரம் இது வெறும் டீசர் தான் என்றும், இன்னும் மெயின் பிக்சர் விஜய் குறித்த பல விஷயங்களை அரசியல் காரணத்திற்காக விஜய்க்கு போட்டியாக இருக்கும் அரசியல் கட்சிகள் கிளப்பி விடலாம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜய் பிறந்தநாள் அன்று திரிஷா வாழ்த்து தெரிவிக்காமல், விஜயின் பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, விஜய் உடன் இருக்கும் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு ஒரு காதல் பாடலுடன் திரிஷா வாழ்த்து தெரிவித்ததும் கூட திரிஷாவை ஏதேனும் அரசியல் கட்சிகள் பின்னின்று விஜயை காலி செய்வதற்காக இயக்குகிறதா என்கின்ற சந்தேகத்தையும் அரசியல் விமர்சனங்களும் சினிமா பத்திரிக்கையாளர்களும் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.