நடிகை திரிஷா சினிமாவில் டாப் நடிகையாக இருந்து, இடையில் சில வருடம் மார்க்கெட் இல்லாமல் மீண்டும் வீட்டிலே முடங்கினார், மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க கடுமையாக முயற்சித்த திரிஷாவுக்கு, பலன் கொடுத்தது பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்ற குத்தவை கதாபாத்திரம், அதனை தொடர்ந்து திரிஷாவுக்கு உதவும் வகையில் விஜய்யே முன் வந்து லியோ படத்தில் தனக்கு ஜோடியாக திரிஷாவை போட வேண்டும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தில் திரிஷா – விஜய் இணைந்து நடிக்க தொடங்கியதுமே இவர்கள் இருவர் குறித்த செய்திகள் ரெக்கை கட்டி பறக்க தொடங்கியது, மேலும் அதற்கேத்தார் போல் விஜய் -திரிஷா குறித்த நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது, விஜய் புதிய அலுவலகம் இருக்கும் அதே அப்பார்ட்மென்டில் புதிய வீடு வாங்கி குடியேறினார் திரிஷா.
அதே போன்று படப்பிடிப்பு இல்லை, ஆனால் விஜய் – திரிஷா இருவரும் ஜோடியாக நார்வே நாட்டில் சுற்றுலா சென்ற புகைப்படம் வெளியாகி பேசும் பொருளாக அமைத்தது. இப்படி திரிஷா உடன் விஜய் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியானாலும் அதெயெல்லாம் பொறுப்படுத்தாமல் நாங்கள் அப்படித்தான் என விஜய் – திரிஷா இருவரும் கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்க்கு ஜோடியாக சென்ற வீடியோ அடுத்து வைரலாகி பரப்பானது.
இந்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வந்த நயன்தாரா மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்து வரும் நிலையில், திரிஷாவின் மார்க்கெட் எகிற தொடங்கியுள்ளது, அந்த வகையில் நயன்தாரா இடத்தை பிடித்துவிட்டார் திரிஷா என்று சொல்லும் அளவுக்கு, அடுத்தடுத்து அவருடைய நடிப்பில் படங்கள் வெளியாக இருக்கிறது, மேலும் த்ரிஷாவுக்கு வயசே ஆகாத என்று சொல்லும் அளவுக்கு 40க்கு மேல் வயசானாலும் இன்னும் இளமையாகவே உள்ளார் திரிஷா.
இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கி இருந்த் திரிஷா, மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தற்பொழுது தனக்கான இடத்தை பிடித்துள்ள நிலையில், தீடிரென சினிமாவை விட்டு விலக இருப்பதாக வெளியான தகவல் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து விசாரித்ததில் சினிமாவில் திரிஷா நடித்தது போர் அடித்து விட்டது, அதனால் சினிமாவை விட்டு விலக இருப்பதாக அவருடைய தாயாரிடம் தெரிவிக்க, அவருக்கும் அவருடைய தாயாருக்கும் கடும் வாக்குவாதமே நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் திரிஷா சினிமாவை விட்டு விளக்குவதற்கு பின்னனியில் விஜய் உள்ளதாக கூறப்படுகிறது, அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், தன்னுடைய அரசியலுக்கு துணையாக தன்னுடைய அரசியல் கட்சியில் திரிஷா பயணிக்க வேண்டும் என விருப்பியுள்ளார், திரிஷாவும் விஜய் உடன் சினிமாவில் ஒன்றாக பயணித்தது போன்று அரசியலிலும் பயணிக்க விருப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து எப்படி விஜய் தற்பொழுது நடிக்கும் படத்துடன் இனி சினிமாவில் நடிப்பதில்லை என முழு நேர அரசியல்வாதியாக உருவெடுக்க போகிறாரோ, அதே போன்று சினிமாவில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டு, அரசியலில் என்னுடன் முழுநேர அரசியல் வாதியாக பயணி என்று விஜய் போட்ட உத்தரவை தொடர்ந்து, சினிமாவை விட்டு விலகி விஜய்யுடன் இணைந்து அரசியல் பணியாற்ற இருக்கிறார் திரிஷா என கூறப்படுகிறது.