திரிஷா காட்டில் அடைமழை தான்… போட்டி போட்டு கமிட் செய்யும் அஜித் – விஜய்…

0
Follow on Google News

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் அவருடைய 68-வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்ப ஏற்படுத்திய வருகிறது. இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் அன்றைய காலகட்டத்தில் நடிகர் ரஜினி – குஷ்பூ இருவரும் ஜோடியாக அண்ணாமலை உட்பட பல படங்களில் நடித்திருப்பார்கள்.

அதே போன்று ரஜினி – குஷ்பு மீண்டும் இன்றைய காலகட்டத்தில் ஜோடியாக நடித்தால் ரசிகர்களின் பார்வையில் ஒரு ஹீரோ – ஹீரோயின் போன்ற தோற்றத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தாதது. ஆனால் இன்றைய இளம் நடிகையுடன் ரஜினி ஜோடியாக நடித்தால், 70 வயதான ரஜினி ஹீரோவாகவே ரசிகர்களுக்கு காட்சி அளிப்பார்.

அந்த வகையில் குஷி, திருமலை போன்ற படங்களில் விஜய் – ஜோதிகா ஜோடியாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும். தற்பொழுது ஜோதிகா திருமணம் முடிந்து இரண்டு குழந்தைக்கு தாயான பின்பு. மீண்டும் விஜயுடன் ஜோதிகா ஜோடி சேர்ந்து நடித்தால், அது விஜயின் இமேஜ் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், அந்த வகையில் விஜய் நிச்சயம் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகை திரிஷா, முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இருவருடன் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்து வெற்றி பெறுவதன் மூலம் நயன்தாரா விட்டு சென்ற அந்த நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என்கின்ற முயற்சியில் தற்பொழுது விஜய்யுடன் லியோ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதில், லியோ படத்தில் நடிகர் விஜய்யின் சிபாரிசின் பேரிலேயே, திரிஷா கமிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் விஜய்யின் 68வது படத்தில் மீண்டும் விஜய்யின் சிபாரிசில் திரிஷா இந்த படத்தில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிது.

அதேபோன்று துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க அஜித் சிபாரிசு செய்துள்ளார், ஆனால் நயன்தாராவுக்கு – திரிஷாவுக்கு இருக்கும் சினிமா போட்டியில், திரிஷா சினிமா வளர்ச்சிக்கு நாமே இடம் கொடுத்து விட கூடாது என்பதால், திரிஷா வேண்டாம் என விக்னேஷ் சிவன் மறுத்து விட்டார், ஆனால் கடைசியில் விக்னேஷ் சிவனே அஜித் படத்தில் இருந்து வெளியேற்ற பட்டார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு பதில் அஜித் நடிக்க இருக்கும் படத்தில் மகிழ் திருமேனி கமிட்டாகி, விரைவில் தொடங்க இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிசா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே சில காலம் முடங்கி இருந்தாலும், மீண்டும் தற்பொழுது என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா பழைய இளமை தோற்றத்துடனே காட்சி அளிக்கிறார்.

இதனால் த்ரிஷாவுக்கான பட வாய்ப்புகள் பெரிதளவு குவிந்து வருவதால், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக ரி என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா, தற்பொழுது குந்த வைக்க முடியாத அளவுக்கு பிசி நடிகையாக, திரிஷா காட்டில் அடை மழை தான் என மற்ற சக நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு முன்னனி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார் திரிஷா.