இரண்டு நாள் மட்டுமே படப்பிடிப்பு முடிந்தது… 9 கோடி சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் சந்திரமுகி, தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த் பாபா படத்தின் தோல்வியினால் மிகப் பெரிய சரிவை சினிமாவில் சந்தித்தபோது அவருக்கு மீண்டும் சினிமாவில் கை கொடுத்து தூக்கிய படம் சந்திரமுகி. இந்த படத்தின் இயக்குனர் பி வாசு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது தொடங்கி உள்ளார்.

ரஜினியிடம் கால் சீட் கிடைக்காததால் ராகவ லாரன்ஸ் நடிப்பில் இந்த படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். இதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். கங்கனா நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான தலைவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஜெயலலிதாவாக ஏற்று கங்கனா நடித்தது குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து வரும் கங்கனா மும்பையில் இருந்து படப்பிடிப்புக்கு வருவதற்கு தனி விமானம், அவருடன் பல உதவியாளர்களை அழைத்து வருகிறார் அவர்களுக்கு சம்பளம் தயாரிப்பு நிறுவனமே கொடுத்து வருகிறது. சந்திரமுகி கெட்டப்பில் மிக பொருத்தமாக கங்கனா இருப்பதாக பட குழுவினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்பொழுது சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக மொத்தம் 30 நாள் கால் சீட் கொடுத்துள்ள கங்கனா சுமார் ஒன்பது கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதே நேரத்தில் 30 நாள் கால் சீட் கொடுத்துள்ள கங்கனா தற்பொழுது இரண்டு நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அடுத்து ஜனவரியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெறும் இரண்டு நாள் மட்டுமே கங்கனா சந்திரமுகி படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.