அந்த நடிகருடன் தமன்னா டேட்டிங் … விரைவில் திருமணம்.. யார் அந்த நடிகர் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றவர் நடிகை தமன்னா, கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான தமன்னா மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என அனைவரும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பிற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா.

2019ம் ஆண்டு பையா படத்தில் நடிக்கும் பொழுது, அவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் கார்த்திக் உடன் காதல் கிசுகிசுவின் சிக்கினார் தமன்னா, இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு செய்திகள் வந்த நிலையில் பையா படத்திற்கு அடுத்து கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தில், நடிகர் கார்த்திக் இயக்குனரிடம் சிபாரிசு செய்து தனக்கு ஜோடியாக தமன்னா நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த படத்தில் தமன்னா நடிகர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்ததாகஅப்போது தகவல் வெளியானது.

தமன்னா காதல் விவகாரம் கார்த்திக் தந்தை சிவக்குமார் கவனத்திற்கு சென்றதும், மகன் கார்த்திக்கை கடுமையாக கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப தமன்னாவின் காதலை நடிகர் கார்த்திக் கைவிட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தொடர்ந்து பல சினிமாக்களில் நடித்து வந்த தமன்னா தற்பொழுது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் மிக நெருக்கமாக பொது இடங்களில் சுற்றி வருகிறார்.

லாஸ்ட் ஸ்டோரி என்கின்ற வெப் சீரியஸில் விஜய் வர்மா உடன் நடிகை தமன்னா ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர். இந்த நெருக்கம் இருவருக்கும் காதலா மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை முத்தங்களால் இருவரும் பகிர்ந்து கொண்டனர். இவர்களின் நெருக்கம் குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், ஒன்றாக பல நேரங்களில் ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் இந்த வருடமே இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.