தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றவர் நடிகை தமன்னா, ஆரம்பகட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா அவருடைய அறிமுக படமான கல்லூரி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது, அவரின் உதவியாளர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து தான் படப்பிடிப்புக்கு வந்து சென்றுள்ளார்.
அதே போன்று தமன்னா கல்லூரி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே, அடுத்த படவாய்ப்புகள் தேடி உதவியாளர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு சென்று சில முக்கிய பிரமுகர்களை சந்தித்து பட வாய்ப்பு கேட்டு வந்துள்ளார், ஆனால் இன்று அவர் படப்பிடிப்புக்கு விமானத்தில், அவர் ஒருவர் வருவதர்க்கு இரண்டு விமான டிக்கெட் வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இரண்டு விமான டிக்கெட்டில் தமன்னா ஒருவர் மட்டுமே பயணிப்பதாக கூறப்படுகிறது.

அதாவது நடிகை தமன்னா விமானத்தில் பயணம் செய்யும் போது, அவர் அருகில் வேறு யாரும் அமர கூடாது , அந்த இருக்கைகள் காலியாக தான் இருக்க வேண்டும் என்பதற்காக, தமன்னா ஒருவர் பயணிக்க இரண்டு இருக்கைக்கான டிக்கெட் புக் செய்யப்படுகிறதாம். இதை அறிந்த சினிமா வட்டாரத்தினர் தயாரிப்பாளர் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்பட்டு வருகிறது என நடிகை தமன்னா அட்ராசிட்டியை பார்த்து முணு முனுத்து வந்தனர்.
2023ல் வெளியான லாஸ்ட் ஸ்டோரி என்கின்ற வெப் சீரியஸில் விஜய் வர்மா உடன் நடிகை தமன்னா ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர். இந்த நெருக்கம் இருவருக்கும் காதலா மாறியது. இதனை தொடர்ந்து கடந்த 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியை முத்தங்களால் இருவரும் பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாகவும், ஒன்றாக பல நேரங்களில் ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனை இருவரும் பல பேட்டிகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தனர். மேலும், மும்பையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள்.
தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒன்றாக எடுத்த புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வைரலாக்கி வந்தனர். விஜய் வர்மாவுடன் காதல் வயப்பட்ட தமன்னா சுமார் இரண்டு ஆண்டுகள் அவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், விஜய் வர்மா தன்னுடைய ஹேப்பி பிளேஸ் என்று தமன்னா வெளிப்படையாக பேசி இருந்தார் தமன்னா.
தன்னுடைய காதலை விட்டு விலக மனமில்லாம், மேலும் அடிக்கடி காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் மும்பையிலேயே தங்கிய தமன்னா, ஹிந்தி படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வந்தார். தென்னிந்திய மொழியில் ஒன்னிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்தார் தமன்னா. இந்நிலையில் விரைவில் தமன்னா – விஜய் வர்மா இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . இதனை உறுதி செய்யும் வகையில் விஜய் வர்மாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் தமன்னா. இனி இருவரும் நண்பர்களாக தொடர முடிவு செய்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.