நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து, முதல் படத்தையே வெற்றி படமாக்கி, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். மேலும் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில், முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். 35 வயதாகும் சுனைனா, இன்று வரை அழகு குறையாமல் இருப்பதோடு சிங்கிளாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் நடிகர் சுனைனா அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயம் நடந்து முடிந்து விட்டது என மோதிரம் மாற்றிய கையோடு, அந்த மாப்பிள்ளையின் கையை பிடித்திருந்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். ஆனால் அப்போது அவர் அந்த நபரின் பெயரை குறிப்பிடாமல் அறிவித்ததால், சுனைனா யாருடன் கமிட்டாகி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிலையில்தான் சுனைனாவின் வருங்கால கணவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காலித் அல் அமெரி என்ற இவர், துபாயை சேர்ந்த மிகப் பிரபலமான யூடியூபர். துபாயில் Vlog செய்து அதன் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர்களை கொண்ட இவர், மூன்று மில்லியன் Followers-களையும் வைத்துள்ளார். ஆனால் இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். இவருக்கு குழந்தைகளும் இருக்கின்றன.
இந்நிலையில் தான் தனது முதல் மனைவியான சலமா முஹம்மது என்பவரை விவாகரத்து செய்த இவர், நடிகை சுனைனாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய உள்ளார் என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காலித் அல் அமெரி என்பவர் நடிகர் மம்முட்டியுடன் ஒரு நேர்காணல் ஒன்றையும் எடுத்திருக்கிறார்.
அதில் மம்மூட்டி, உலகம் அழியும் வரை மக்கள் உங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது, யாருக்கும் அப்படி நடக்கப் போவதில்லை என, பல தத்துவங்களை பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பேட்டியின் மூலம் தான் பல பேரின் கவனத்தையும் youtuber காலித் ஈர்த்திருந்தார். இந்நிலையில் சுனைனா மற்றும் காலித் ஆகிய இருவருக்கும், நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.