கடைசி வரை அந்த பழக்கத்தை ஸ்ரீ தேவி விடவில்லை.. அது தான் அவருடைய மரணத்திற்கு காரணம்.. போட்டுடைத்த கணவர்..

0
Follow on Google News

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. அந்த காலத்திலேயே கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து திரையுலகில் பணியாற்றி பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி, நடிகை ஸ்ரீதேவி இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றாலும், அவருக்கு இரண்டாவது மனைவியானார் ஸ்ரீதேவி.

திருமணத்துக்கு முன்பே லிவ்விங் டுகெதராக வாழ்ந்து கர்ப்பமான ஸ்ரீதேவி அதன்பின்னர் ஜான்வி, குஷி என இரண்டு மகள்களையும் பெற்றுக் கொண்டார். இப்படி இந்தியாவே கொண்டாடும் ஒரு நடிகையாக இருந்த ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது, அங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டம். பாத்ரூமில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

அதுமட்டுமின்றி ஸ்ரீதேவி பாத் டப்பில் விழுந்து இறந்துவிட்டார் என்று சொல்வது அப்பட்டமான பொய். ஸ்ரீதேவியை பணத்திற்காக தான் போனி கபூர் திருமணமே செய்துகொண்டார். ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ளும் போது போனி கபூருக்கு பெரிய மகன் இருந்தார். கிட்டத்தட்ட அவருக்கும் ஸ்ரீதேவிக்கும் ஒரே வயது. ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு காரணமே பணம் தான். அதேபோல் அவரின் மரணத்திற்கும் பணம் தான் முக்கிய காரணம்.

மேலும் ஸ்ரீதேவி பெயரில் ரூ.200 கோடி இன்சூரன்ஸ் இருந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் என்றெல்லாம் பலர் பல கருத்துக்களை கூறி வந்தனர். அது மட்டுமல்லாமல் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் முதலில் அவருக்கு மாரடைப்பு என்று கூறப்பட்டது. பிறகு குளியல் தொட்டியில் தவறி விழுந்ததால் மரணம் என்று சொல்லப்பட்டது. இதுவும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. இதனாலேயே ஸ்ரீதேவிக்கு என்ன நடந்தது என தெரிந்து கொள்ள ரசிகர்கள் துடியால் துடித்தனர்.

இந்நிலையில் இந்த நெடுநாள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் பதிலளித்துள்ளார். அதில்,’ நான் எப்படி என் அன்பு மனைவியைக் கொல்ல முடியும். பலரும் வாய்கூசாமல் பேசி மனதைப் புண்படுத்துகின்றனர். இதே கேள்வியை துபாய் போலீசார், சுமார் 48 மணி நேரம் கேட்டு என்னைத் துன்புறுத்தியது. அதன்பின் என்னிடம் உண்மை கண்டறியும் சோதனையையும் செய்து அதில் தான் நிரபராதி என நிரூபித்தேன்.

இதையடுத்தே ஸ்ரீதேவியின் மரணம் விபத்து என உறுதி செய்து, இந்தியாவிற்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர். பல ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த என்னைப் பேச வைத்துவிட்டார்கள். இனி இதுதொடர்பாகப் பேசாமல் இருக்கலாமே. திரையில் அழகாக காட்சியளிக்க ஸ்ரீதேவி கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருப்பார். உப்பு இல்லாத உணவையே சாப்பிட்டு வந்தார். இதனால் பலமுறை சோர்வடைந்து தலை சுற்றலுடன் கீழே விழுந்து இருக்கிறார்.

ரத்த அழுத்தம் குறைவு பிரச்சினையும் இருந்தது. டாக்டர்கள் எச்சரித்தும் அதை சீரியசாக அவர் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஸ்ரீதேவி இயற்கையாக மரணம் அடையவில்லை. தவறி விழுந்துதான் இறந்தார். அந்த நேரத்தில் துபாய் போலீசார் என்னை ஒரு நாள் முழுவதும் விசாரித்தார்கள். எனக்கு உண்மை கண்டறியும் சோதனையும் செய்தார்கள்.

இறுதியில் குளியல் தொட்டியில் தவறி விழுந்துதான் இறந்தார் என்ற முடிவுக்கு வந்தனர். ஸ்ரீதேவி இறந்த சில நாட்களுக்கு பிறகு நடிகர் நாகார்ஜூனா என்னை சந்தித்தார். ஒருமுறை அவரோடு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தபோது கடுமையான உணவு கட்டுப்பாடு இருந்து படப்பிடிப்பில் சுய நினைவிழந்து கீழே விழுந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்” என்றார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு அவருடைய உணவு பழக்கம் தான் என்பதை அவருடைய கணவர் சுட்டி காட்டியுள்ளது குறிப்பிடதக்கது.