மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்பு ஒட்டுமொத்த மலையாள சினிமா மட்டுமின்றி, தமிழ் தெலுங்கு கன்னட மலையாள என அனைத்து சினிமா துறையினர் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பும், விவாத பொருளாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து துறையில் இருக்கிற சினிமா நடிகைகள் ஒவ்வொருவராக நடிகைகள் சினிமாத்துறைக்குள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்து தங்கள் வேதனையை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் சினிமா நடிகைகள் ஒரு காலத்தில் வெளியூர் படப்பிடிப்பு சென்றால் ஒரு மரத்தைச் சுற்றி தற்காலிகமாக சுற்றி நான்கு பேர்கள் சேலையை வைத்து மறைத்து கொள்வார்கள். அதற்குள் தங்கள் உடைகளை மாற்றிக்கொள்வார்கள், அப்போது எந்த ஒரு பாதிப்பும் அந்த நடிகைக்கு இருந்ததில்லை, ஆனால் இன்று நவீனமாக வளர்ந்துள்ள சினிமாவில் விலை உயர்ந்த கேரவன்கள் பவுன்சர்கள் என நடிகைக்கு சகல வசதியும் செய்து கொடுத்தாலும், நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல்தான் அமைந்துள்ளது.
அதாவது நடிகைகள் பாதுகாப்புக்காக தனி கேரவன் வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலும், அந்த கேரவனுக்குள் நடிகைகள் செல்வதற்கே அஞ்சும் சூழல் தான் தற்பொழுது சினிமாவில் அரங்கேறி வருகிறது. பொதுவாக எங்கெல்லாம் அக்கிரமம் நடக்கிறதோ அங்கே எல்லாம் அதிரடியாக புகழ்ந்து வில்லன்களை அடித்து தூம்சம் செய்து மக்களை சினிமாவில் மட்டும் பாதுகாக்க கூடிய நடிகர்கள் பலரும் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு மோசமா என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் வெளியாகி, இவர்களையா நாம் கொண்டாடினோம் என்று மக்கள் வேதனை படும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ராதிகா மலையாள சினிமாவில் நடந்த ஒரு சம்பவத்தை வெளிப்படுத்தி உள்ளார், ஒருமுறை ராதிகா மலையாள சினிமா படப்பிடிப்பில் இருந்தபோது, அவர் நடந்து செல்லும் போது நடிகர்கள் ஒருபுறமாக அமர்ந்து ஒரு போனின் வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு தமிழ் நபரை ராதிகா அழைத்து என்ன அவர்கள் சிறிது கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர் கேரவனில் எல்லா நடிகைகள் துணி மாற்றக்கூடிய வீடியோக்கள் அவங்க கிட்ட இருக்கு, எந்த நடிகை பெயரை சொன்னாலும் அதில் வீடியோவாக இருக்கின்றது என்று ராதிகாவிடம் அந்த நபர் தெரிவித்திருக்கிறார். உடனே ஷாக் ஆன நடிகை ராதிகா அவருக்கு தெரிந்த அனைத்து நடிகைகளிடம் கேராவனுக்குள்ளே துணி மாற்ற போகும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா போங்க என்று எச்சரித்துள்ளார்.
மேலும் படப்பிடித்து தளத்தில் இப்படி இருந்தால் எப்படி நடிகைகள் ஷூட்டிங் வருவது என ராதிகா அந்த படப்பிடிப்பு தளத்தில் திட்டியும் உள்ளார், இந்த சம்பவம் ராதிகா நடித்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் நடந்ததாகவும் அதன் பின்பு அந்த படப்பிடிப்பு முடிந்த பின்பு கேரளாவில் இருந்து வந்து விட்டார் ராதிகா.
மேலும் ராதிகா கூறுகையில் சினிமா துறையில் எத்தனை நபர்கள் பெண்களின் ரூம்பை தட்டி தட்டி இம்சை படுத்துகிறார்கள் என்று தனது கோபத்தை வெளிப்படுத்திய ராதிகா, எத்தனையோ நடிகைகள் என்னுடைய ரூமுக்கு வந்து மேடம் நான் உங்க கூட இருக்கேன் நீங்க இருந்தா எங்களை யாரும் தொல்லை செய்ய மாட்டார்கள் என்று சொல்லி என்னுடன் வந்து இருந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா.