தமிழே பிடிக்காதாம்… நடிகை சங்கீதா திமிர் பேச்சு… என்ன எகத்தாளம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் 90’s காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சங்கீதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தமிழ் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. 1997-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சங்கீதா.

இதையடுத்து 1998 ஆம் ஆண்டு வெளிவந்த காதலே நிம்மதி படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்த சங்கீதா. உயிர், தனம், நேபாளி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தார். நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் பிதாமகன்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, மனோபாலா, சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சங்கீதா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்திருந்தது.

இந்நிலையில் தான், நடிகை சங்கீதா அளித்த பேட்டியில், எனக்கு தமிழ் பிடிக்காது, தெலுங்கு தான் மிகவும் பிடிக்கும். நான் தெலுங்கில்தான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இதைப் பார்த்து எத்தனை பேர் கோபப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை. இதை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், தெலுங்கில் எனக்கு கொடுக்கப்படும் மரியாதை இங்கு எனக்கு கிடைப்பதில்லை.

தமிழ் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஏன் இந்த மனப்பான்மை இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் வேண்டுமென்றேதான் தமிழில் படங்களில் நடிப்பது கிடையாது. காரணம் என்னவென்றால் தமிழை விட தெலுங்கில் எனக்கு நல்ல மரியாதை, நல்ல சம்பளம், நல்ல வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன என்று கூறினார்.

மேலும், தமிழில் ஏதாவது ஒரு படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்பவர்கள், முதலில் மரியாதை குறைவாகத்தான் பேசுவார்கள். நான் என்னவோ இங்கு கரண்ட் பில் கட்ட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது போலவும், அவர்கள்தான் எனக்கு வாழ்க்கை தருவது போலவும் பேசுவார்கள். உங்களுக்கு சம்பளம் இவ்வளவு என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.

நீங்கள் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்பார்கள். நான் உங்களை அழைத்து வாய்ப்பு கேட்கவில்லை. நீங்கள்தான் என்னை அழைத்து உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள். அப்படி இருக்கும் பொழுது, நான்தான் எனக்கான சம்பளத்தை முடிவு செய்ய வேண்டும். அதை நான் சொன்னால் இல்லை இல்லை இதுதான் சரியாக இருக்கும் என்று வாதம் செய்வார்கள்.

எனக்கு அது போன்று பேசுவதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. எனக்கான மரியாதையை அவர்கள் கொடுக்க வேண்டும். நான் பெரிதாக இந்த துறையில் கிழித்து விட்டேன், பெரிய அளவில் சாதித்து விட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் இந்தத் துறையில் நான் கிட்டத்தட்ட 30 வருடங்கள் பயணித்து இருக்கிறேன். அதுவே எனக்கு மிகப்பெரிய சாதனைதான்.” என்று ஆதங்கத்துடன் பேசியிருந்தார்.இது குறித்து ரசிகர்கள் பலரும் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்தமாக தமிழே பிடிக்காது என்று சொல்வது தவறு என கருத்து பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் சங்கீதாவின் பேச்சு ரசிகர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்!