நடிகை சங்கீதா 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பாகவே ஒரு சில மலையாள படத்தில் நடித்து வந்தார். அதேபோல இவரது கணவரான கிருஷ் 2006 ஆம் ஆண்டு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலம் இவரை பாடகராக அறிமுகம் செய்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மேலும் இவர், அழகிய அசுரா, சிங்கம் 3 முப்பரிமாணம் போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
2012ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றுவிட்டார் கிருஷ். அதேபோல நடிகை சங்கீதா எண்ணற்ற படங்களில் நடித்து வந்தார். பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இறுதியாக 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நெருப்புடா’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். அதன் பின்னர் இவருக்கும் சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் இவரும் சின்னத்திரை பக்கம் திரும்பினார்.
இறுதியாக கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதியருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து இந்த தம்பதியருக்கு ஷிவியா என்ற பெண் குழந்தையும் பிறந்தார்.
அதுமட்டுமின்றி நடிகை சங்கீதா அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் படத்தில் விஜய்யின் அண்ணியாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியானது. நடிகை சங்கீதா, வீட்டை அபகரித்துவிட்டதாக சங்கீதாவின் தாயார் கடந்த ஆண்டு புகார் கூறியிருந்தார். இந்த புகாருக்கு சங்கீதா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது டிராண்டாகி வருகிறது.
அந்த பேட்டியில், எல்லா நடிகர்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், சிறுவயதிலேயே நடிக்க வந்து விடுவார்கள். என்னுடைய அம்மா என்னை 14 வயதிலேயே நடிக்க அனுப்பி வைத்துவிட்டார்கள். என்னுடைய வருமானத்தை நம்பித்தான் அந்த குடும்பமே இருந்தது. நான் ஓரு ஏடிஎம் மிஷின் மாதிரிதான் இருந்தேன். ஆனால், நமக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு, அந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் நாம் நினைக்கும் போது, நம்மை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் நமக்கு எதிரானவர்களாகி விடுவார்கள்.
ஏன் என்றால் ஏடிஎம் மிஷினில் கார்டு போட்டா காசு வரவில்லை. இதனால், என்னாகும், ஏடிஎம் மிஷினை தட்டுவோம், அடிப்போம், எப்படியாவது காசு வராதா என்று எதிர்பார்ப்போம் அப்படித்தான் என் வாழ்க்கையில் நடந்தது.” என்றார். மேலும், எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு ஒரு குழந்தை இருக்கு, என் அம்மா, அண்ணன் யார் யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் குறையே இல்லாமல் செய்துவிட்டேன்.
நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை அவர்கள் சரியாக பயன்படுத்தாமல், ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு, மீண்டும் மீண்டும் என்னிடம் பணம் கேட்கும் போது கஷ்டமா இருக்கும். என்னால் முடிந்த வரை இப்போதும் அவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், பணம் கொடுக்கும் அளவை குறைத்துக்கொண்டது தான் இப்போது பிரச்சனை, அவர்கள் இருக்கும் வளசரவாக்கம் வீட்டின் மீது நிறைய கடன் இருந்தது.
அந்த கடனை எல்லாம் நான் அடைத்த பிறகுதான், அந்த வீட்டை எனக்கு கொடுத்தார்கள். அந்த வீட்டில் இப்போது அம்மா வாழ்ந்து வருகிறார்கள். என் அம்மா தப்பானவங்களா இருக்கலாம் ஆனால், அவர்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்பும் அளவுக்கு நான் தப்பான மகள் இல்லை என நடிகை சங்கீதா பேட்டியில் பேசி உள்ளார்.