சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நடிகை சமந்தா 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியிலும் சிறந்த மதிப்பெண்ணை பெற்று வெளியே வந்தவர் மிக கடுமையான போராட்டத்தை சந்தித்தார், பல விளம்பர படங்களில் நடித்த சமந்தா பல நேரங்களில் வேலை இன்றி ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதில் ஒரு வேலை மட்டுமே சாப்பிட்ட காலமும் உண்டு.
சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து நாகசைதையாவை திருமணம் செய்து கொண்டார் சமந்தா. சுமார் 400 கோடி சொத்துக்களுக்கு அதிபதியான நாகசந்தையாவே பணத்திற்காக தான் சமந்தா திருமணம் செய்து கொண்டார் என தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக பேசியது. இருந்தாலும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை மூன்று வருடங்களில் முடிவுக்கு வந்தது.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/actress-samanthaa-boy-freind-1024x575.jpg)
இதற்கு காரணம் சமந்தா ஒரு வெப் சீரியஸில் மிக கவர்ச்சியாக நடித்ததாகவும், அதற்கு நாகர்ஜுனா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் நீங்களும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என சமந்தா விவாதம் செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நாகசைந்தய்யா சமந்தா இருவருக்கும் விவாகரத்து ஆனது என பரவலாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து நாகசைந்தய்யா – சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்த போது சமந்தா ஜீவனாம்சமா எத்தனை கோடி கேட்க இருக்கிறார் என பலரும் எதிர்பார்த்து இருக்கு, நாகசைந்தய்யா உடன் சமந்தா வாழ்ந்ததற்காக சமந்தாவுக்கு சுமார் 200 கோடி ரூபாய் நாகர்ஜுனா குடும்பத்தினர் கொடுக்க முன் வந்த போதும் நான் பணத்திற்காக நாகசைந்தய்யாவை காதலிக்கவில்லை நான் மனதார காதலித்தேன் உங்கள் பணம் எனக்கு வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சமந்தா வந்த போது, அதுவரை சமந்தாவை கண்டபடி தூற்றிய தெலுங்கு மீடியாக்கள் தலைகுனிந்து நின்றது.
இந்நிலையில் சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சீரிஸில் நடித்து மிக பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை சமந்தா, மேலும் தற்போது ஸ்போர்ட்ஸிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தா, வேர்ல்ட் பிக்கில்பால் லீக்கில் சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியை வாங்கி உள்ளார், இந்த நிலையில் நடிகை சமந்தா சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சீரிஸில் நடித்த போது அதன் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே டைவோர்ஸ், உடல் நிலை பிரச்சனை என பல பிரச்சனைகளை தாண்டி மீண்டும் சினிமாவில் நடித்து வரும் நடிகை சமந்தாவுக்கு, சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சீரிஸில் நடித்த போது அதன் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் பழகிய பின்பு ஆறுதலாக இருந்து வந்துள்ளது. மேலும் சமந்தா மீது அதிக அக்கறை காட்டி வந்துள்ளார் இயக்குனர் ராஜ் நிதிமோரு, இதனால் சிட்டாடல் வெப் சீரியஸ் படப்பிடிப்பு முடிந்தும் கூட ராஜ் நிதிமோரு – சமந்தா இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது சமந்தா அடிக்கடி சிட்டாடல் தொடரின் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் பொது இடங்களில் கூட ஜோடியாக தலை காட்டி வருகிறார்கள் இவர்கள் இருவரும், மேலும் சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு இருவரும் மிக நெருக்கமாக கைக்கோர்த்தப்படி பொது இடங்களில் ஜோடியாக வலம் வருவது இவர்கள இருவரும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு இருவரும் காதலித்து வருகிறார்களா.? அல்லது வெறும் நபர்கள் தானா.? என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில் சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு இருவரும் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை, அதே நேரத்தில் சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் உறுதி படுத்ததாதா தகவல் ஒன்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.