நடிகை சமந்தா நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 இணையதொடர் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இயக்குனர் சேரன் இந்த இணைய தொடருக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர்கள் மீது சூழ்ச்சிவாதிகள் சுமத்த முனையும் இதுபோன்ற செயல்களை முன்னரே களையாவிட்டால் உலக நாடுகள் முன் நம் சந்ததிகள் அவமானம் கொள்ள நேரிடும் என்றும் இதை உலகத்தமிழர்களின் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள இயக்குனர் சேரன், இது போன்று வியாபாரத்திற்காக விறுவிறுப்பிற்காக என்ற காரணங்களை வைத்துக்கொண்டு உலக மக்கள் முன் இச்சமூகம் இப்படியான ஒரு காரணங்களோடு தீய பழக்கங்களோடு உரிமை என்ற பெயரில் போரிட்டு மக்களை கொல்கிறார்கள் என்ற ஆவணத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள் என நாம் யோசிக்க வேண்டும்.
சமந்தாவே ஒப்புக்கொண்டிருக்கிறார் இலங்கையில் நடந்த படுகொலைகளை காண்பித்து தான் அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். அப்போ அது இலங்கை கதை என சொல்லியே எடுத்திருக்கிறார்கள்..இது fiction, கதைய கதையா பாருங்கன்னு. சொன்னவங்கட்டதான் நாம் இப்போ விவாதிக்கனும். சமந்தாகிட்ட சொல்லப்பட்ட கதை வேறு.. அவர்கள் காட்டிய கதை வேறு என்பதை சமந்தா உணரவேண்டும்..
விடுதலிப்புலி சகோதரிகள் தன் உடலைக்கொடுத்து எதையும் சாதிக்கும் குணம் கொண்டவர்கள் அல்ல என்பது அவங்களுக்கு தெரியாது. அதற்கு ஏதேனும் ஆதாரம் காட்டினார்களா ஆக இந்த வெப்சீரீஸ் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.. இந்த உண்மை உலகெங்கும் மாற்றுக்கருத்து பேசிக்கொண்டிருக்கும் நம் உறவுகளுக்கு புரியவேண்டும். நடிகை சமந்தாவை குற்றம் சுமத்தவில்லை என்பதையும், வேதனையின் உண்மைத்தன்மையும் சமந்தா உணரவேண்டும் என சேரன் தெரிவித்துள்ளார்.