நாக சைதன்யாவும், சமந்தாவும் தமிழில் வெளியாகி சக்கை போடுபோட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்த போது, படத்தில் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி ரியல் வாழ்க்கையிலும் ஒர்க்கவுட் ஆனதால், கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நாகார்ஜுனா குடும்பத்தின் மருமகளான சமந்தா படத்தில் தொடர்ந்து நடிக்க நாகர்ஜுனா குடும்பத்திற்கு அது பிடிக்கவில்லை. இருந்தாலும் மகனுக்காக பொறுத்துக் கொண்டார்கள்.
ஆனால் சமந்தா அதிக கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்தது தான் குடும்பத்தில் பெரிய பூகம்பமாக வெடித்தது. இந்நிலையில் சமந்தாவும், நாகசைதன்யாவும் திருமணமான 4 ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறிது காலம் சிங்கிளாக இருந்த சைதன்யா, இப்போது நடிகை சோபிதா பாலாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் நாக சைதன்யாவின் தாய், அதில் பங்கேற்கவில்லை.
மேலும் அவர் தற்போது சோபிதாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அதிரடியாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் நாகார்ஜுனா, லட்சுமி என்ற பெண்ணை தான் முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா. பிறகு லட்சுமியை விவாகரத்து செய்த நாகார்ஜுனா அடுத்ததாக, நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பிறந்தவர்தான் நடிகர் அகில். இந்நிலையில் தான் Like father Like son என அப்பாவை போலவே மகன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சைதன்யாவின் தாய் லட்சுமிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் லட்சுமி, தனது சொந்த மகனான நாக சைதன்யா-சோபிதா நிச்சயத்திற்கு கூட போகவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் இவர்களின் திருமணத்திற்கு கூட லட்சுமி டகுபதி செல்லப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் சமந்தா மற்றும் நாகசைதன்யா திருமணத்திற்கு, லட்சுமி டகுபதி பங்கேற்று திருமணத்தை ஜாம் ஜாம் என நடத்தி வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து சோபிதாவுடன் நடந்த நிச்சயத்திற்கு கூட நாக சைதன்யாவின் தாய் பங்கேற்கவில்லை. மேலும் நாத சைதன்யாவின் மாமா வெங்கடேஷ் டகுபதி மற்றும் மற்றொரு மாமா ரானா டகுபதி என, டகுபதி குடும்பத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை.
அதே நேரம் இவர்கள் அனைவரும் சமந்தாவின் நிச்சயம் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்தனர். அம்மா லட்சுமிக்கு சோபிதாவுடன் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை எனவும், இன்று வரை சமந்தாவுடன் அவர் பேசிக்கொண்டு தான் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் லட்சுமி, சமந்தாவைதான் தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொள்வேன் என்று விடாப்பிடியாக இருக்கிறாராம்.
அதோடு சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதும் கூட, நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி தான் அடிக்கடி நலம் விசாரித்து, அக்கறையோடு பார்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நாக சைதன்யாவின் தாயான லட்சுமிக்கு சமந்தா தான் மருமகளாக வேண்டுமாம். சோபிதா – நாக சைதன்யா நிச்சயதார்த்தம் சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
அதுமட்டுமின்றி தனக்கு நெருக்கமானவர்களிடம், மருமகள் என்றால் அது சமந்தாதான். அவர் தங்கமானவர். முக்கியமாக தனது முன்னாள் கணவர் வளர்ப்பினால்தான் தனது மகனும் அவர் வழியிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். விவாகரத்தின் வலி தனக்கு தெரியும். இதில் சமந்தாவின் தவறு எதுவுமே இல்லை. அதனால்தான் நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தத்துக்கு செல்லவில்லை, திருமணத்துக்கும் செல்லப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனை பார்த்த பலரும் சைதன்யாவின் தாய்க்கு கூட சமந்தாவின் அருமை தெரிகிறது. ஆனால் சைதன்யாவுக்கு தெரியாமல், சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரே என்றும் விமர்சித்து வருகின்றனர்.