முன்னணி நடிகைகளின் ஆட்டத்தை அடக்கும் வகையில் ஒரு தரமான சம்பவம் சினிமா துறையில் நடந்துள்ளது. இதனால் மிகப்பெரிய சோகத்தில் இருக்கின்றனர் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா உட்பட பலர். பொதுவாக நடிகைகள், நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர்களின் உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தான் தனியாக சம்பளம் இதுவரை கொடுக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் நயன்தாரா ஒரு படப்பிடிப்புக்கு வரும் பொழுது குறைந்தது 30க்கு மேற்பட்ட உதவியாளர்கள் உடன் அழைத்து வருவார்.இவர்கள் அனைவருக்கும் சம்பளம் தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தானே சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதர்க்காக, தேவைக்கு அதிகமான உதவியாளர்களை உடன் அழைத்து வருகின்றவர் நயன்தாரா.
நயன்தாராவு மேக்கப் மேன் ஒரு நாள் சம்பளம் 50,000, அதே போன்று சமந்தாவுக்கான மேக்கப் மேன் ஒரு நாள் சம்பளம் 45 ஆயிரம். மேலும் இவர்கள் உடன் மேக்கப் மேன் தான் இவர்களுக்கு மேக்கப் போட வேண்டும் என கண்டிஷன் போடுவார்கள். தயாரிப்பு தரப்பில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு மேக்கப் மேன் நியமித்தால் அதை இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்படத்துறையில் சில தீர்த்தங்கள் தற்போது செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகர் , நடிகைகள் உதவியாளர்கள் மற்றும் இயக்குனரின் உதவி இயக்குனர்கள் ஆகியோரின் சம்பளத்தை அந்த இயக்குனரும் மற்றும் அந்த நடிகர், நடிகைகளும் தங்கள் கையில் இருந்து கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு சீர்திருத்தத்தை தெலுங்கு சினிமா துறை கொண்டு வந்துள்ளது.
இனி வரும் காலங்களில் நடிகர், நடிகைகள் உதவியாளர்களுக்கும் உதவி இயக்குனருக்கும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சம்பளம் கொடுக்கப்பட மாட்டாது என்கின்ற ஒரு சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதனால் நயன்தாரா, சமந்தா ஆகியோர் இதுவரை தயாரிப்பாளர்களுக்கு பெரும் செலவை இழுத்து விடுவதற்காக சற்றும் இரக்கமில்லாமல் 30க்கும் மேற்பட்ட உதவியாளர்களை அழைத்து வந்ததிற்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் செய்த சீர்திருத்தம் போன்றே தமிழ் சினிமாவிலும் கொண்டு வருவதற்க்கான முயற்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதனால், நயன்தாரா சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் ஆட்டம் இனி அடங்கும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.