தனக்குத்தானே லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டி கொண்டு லேடீ சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு அதி முக்கிய காரணம் சிவகார்த்திகேயனைவிட சாய்பல்லவிக்கு தான் உள்ளது என்று அந்த படத்தை பார்க்க ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் சாய்பல்லவி எப்போதுமே அவர் கைவசம் அதிக படங்களை வைத்திருக்க மாட்டார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தே படத்தை தேர்வு செய்வார். குறிப்பாக அந்த படத்தின் நாயகி நடிகர்களுடன் நாலு பாடல்களுக்கு ஆடிவிட்டு நாலு ரொமான்ஸ் கட்சியில் நடித்துவிட்டு போகிற மாதிரியா கதை இருந்தால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் அந்த படத்தில் கமிட்டாக மாட்டார் சாய்பல்லவி.
குறிப்பாக கதாநாயகியின் கதாபாத்திரம் பேசும் வகையில் இருந்தால் மட்டுமே சாய் பல்லவி அந்த படத்தில் கமிட்டாகுவார், குறிப்பாக இதற்கு முன்பு இருந்த நடிகை நதியாவை போன்று கவர்ச்சி காட்டாமல் இரட்டை வசனம் பேசாமல் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார் சாய்பல்லவி. மேலும் அவரிடம் பந்தா இருக்காது. அனைவரிடமும் அண்ணா என்று தான் பேசுவார்.
குறிப்பாக சினிமா துறையில் சார் அல்லது பெயர் சொல்லி கூப்பிடும் பழக்கம் இருக்கும் நிலையில், சாய்பல்லவி அனைவரையும் அண்ணா என்றுதான் சகஜமாக பேசி பழகுவார். இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் மார்க்கட் சரிவை நோக்கி செல்வதும், சாய்பல்லவி மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக நயன்தாரா மற்றும் சாய்பல்லவி இவர்களுக்கு இடையில் நயன்தாரா சரிவை நோக்கியும் சாய்பல்லவி வளர்ச்சியை நோக்கி போவதற்கு காரணம் என்பதை பார்க்கலாம்.
அதாவது நயன்தாரா மார்க்கெட் இழப்பதற்கு காரணம் அவர் படபிடிப்பு வரும் பொழுது சுமார் 12 பவுன்சர்களை அழைத்து வருவார், அந்த பவுன்சர்களுக்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்க வேண்டும், மேலும் தன்னுடைய குழந்தையை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வருவார். அந்த குழந்தையை பராமரிக்கும் ஆயாவிற்கு சம்பளமும் தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டும்.
ஆனால் சாய்பல்லவி அவருக்காக எந்த ஒரு பவுன்சரும் வைத்துக் கொள்ள மாட்டார். மிக எளிமையாக வந்து செல்லக்கூடியவர் தான் சாய்பல்லவி. குறிப்பாக நயன்தாரா போன்று எந்த ஒரு கிசுகிசுவிலும் காதல் சர்ச்சையிலும் சிக்காதவர் சாய் பல்லவி. சிம்புவை காதலித்த நயன்தாரா பிரேக் அப் செய்த பின்பு இன்னொரு பெண்ணின் கணவரான பிரபுதேவாவை ஆட்டைய போட துடித்தார் நயன்தாரா.
ஆனால் அந்த காதலும் முடிவுக்கு வந்தது, இப்படி நயன்தாரா நடிக்கும் நடிகர்களுடன் ஏதாவது ஒரு கிசுகிசுகள் சிக்கி வந்து கொண்டிருக்கையில். சாய் பல்லவி இதுவரை எந்தவொரு கிசு கிசுகி சிக்கவில்லை இதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு நடிகரிடமும் லிமிட் ஆகத்தான் சாய் பல்லவி லிமிட்டாக வைத்துக் கொள்வார், ஒரு மாதிரியான நடிகராக இருந்தால் உடனே அவர்களின் பழக்கத்தை துண்டித்து விடுவாராம் சாய் பல்லவி.
இந்த நிலையில் இப்பொழுது ஒரு படத்திற்கு நான்கு கோடி சம்பளம் வாங்கும் சாய்பல்லவி அடுத்தடுத்து விரைவில் நயன்தாரா வாங்கும் சம்பளத்தை எட்ட இருக்கிறார். மேலும் நயன்தாரா ஒரு மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து நடிகர் மோகன்லால் அரவணைப்பில் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார் நயன்தாரா, ஆனால் சாய் பல்லவி தன்னுடைய சுய முயற்சியால் யாருடைய தயவும் இல்லாமல் இன்று மிகப்பெரிய உச்சத்தில் நடிகையாக இருந்து வரும் நிலையில் நயன்தாராவை நிச்சயம் சாய் பல்லவி சினிமாவில் இருந்து விரட்டி அடிப்பார் என கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.