பொதுவாகவே சினிமா துறையில் கடுமையாக போராடி வாய்ப்பைப் பெற்று தனக்கென ஒரு இடத்தை பிடித்த பின்பு, அந்த இடத்தை தக்க வைக்க ஒரு நடிகையோ நடிகரோ போராடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த சம்பந்தப்பட்ட நடிகையை கீழே வீழ்த்துவதற்காக பல சூழ்ச்சிகள் சினிமா துறையில் நடக்கும். அந்த வகையில் கடந்த காலங்களில் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் மைக் மோகன் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.
அந்த காலத்தில் அவரைப் பற்றி உடல் ரீதியாக தவறான ஒரு செய்திகள் பரவியது, இதனால் அவர் குறித்த பல சர்ச்சை எழுந்து ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிச் சென்றார் நடிகர் மைக் மோகன். அது போன்று பல நடிகர்கள் திட்டமிட்டு அவர்கள் மீது பரப்பப்படும் ஒரு தவறான செய்திகள் மூலம் வீழ்த்தப்பட்டு சினிமாவில் இருந்து விரட்டப்பட்டவர்கள் ஏராளம். அந்த வகையில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலைகளை எதிர்கொண்டு வந்தால் மட்டுமே சினிமாவில் தொடர்ந்து வெற்றியை பெற முடியும்.
அதுவும் ஒரு சினிமா பின்புறம் இல்லாமல் தனி ஒரு நடிகையாகவோ நடிகராகவோ உருவெடுக்கும் பொழுது மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், சினிமாவில் அவரை வீழ்த்துவதற்கு பல சூழ்ச்சிகளும் நடந்தது, அதையெல்லாம் கடந்துதான் என்று சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது சாய் பல்லவிக்கும் அவருடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் திட்டமிட்டு அவர் மீது பொய் செய்தியை பரப்பி அவரை வீழ்த்த பல வகைகளில் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். கவர்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி சாய் பல்லவி நடிக்கும் படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகின்றவர் சாய் பல்லவி.
தொடர்ந்து சாய்பல்லவி நடிக்கும் படங்களில் அவருடைய நடிப்பு பாராட்டும்படியாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான அமரன் படம் அவரை வேறு ஒரு இடத்திற்கு தூக்கிச் சென்று விட்டது. அந்த வகையில் இன்று தென்னிந்திய சினிமாவிலேயே டாப் நடிகையாக உருவெடுத்துள்ள சாய் பல்லவி அடுத்த மிகக் குறுகிய காலத்தில் மிக ப் பெரிய அளவில் சம்பளம் வாங்கக்கூடிய டாப் ஒன் நடிகையாக நிச்சயம் வலம் வருவார் என்பது சினிமா துறவினரின் கணிப்பாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது சாய் பல்லவி குறித்து ஒரு தவறான செய்தி வெளியானது, அதாவது சாய் பல்லவி பாலிவுட்டில் ரன்வீர் கபூருடன் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சாய் பல்லவி நடிப்பதற்காக சைவ உணவு உண்பதாக மாறிவிட்டார் என்று ஒரு ஊடகம் செய்தியாக வெளியிட்டது. மேலும் தான் எங்கு சென்றாலும் சைவ உணவு சமைக்கக்கூடியவர்களை கூடவே அழைத்துச் செல்கிறார் சாய்பல்லவி என்றெல்லாம் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து. சாய் பல்லவி பெரும் அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார்.
இந்த செய்தியை பார்த்த சாய் பல்லவி கடும் கோபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார், அதாவது இது போன்ற ஆதாரம் மற்ற வதந்திகளை செய்திகளாக வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த சாய் பல்லவி, ஒவ்வொரு முறையும் தனக்கு எதிராக ஆதாரமற்ற வதந்திகளும் தவறான செய்திகள் வெளிவந்த போது அமைதியாக இருந்தேன். ஆனால் இனியும் அமைதியாக இருக்க மாட்டேன்.
ஒரு தவறான செய்தியை கடந்து செல்வதால் தான் மீண்டும் மீண்டும் வதந்திகள் பரப்பப்படுகிறது ஆகையால் இனி இது போன்ற தவறான செய்திகள் வெளியானால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார் சாய்பல்லவி. இந்த நிலையில் சாய்பல்லவி வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் நயன்தாராவின் ரசிகர்கள் தான் இது போன்று சாய்பல்லவி மீது தவறான செய்திகளை பரப்பி வருவதாக சாய் பல்லவி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து சம்பந்தமே இல்லாமல் இந்த பிரச்சனையில் நயன்தாராவை இழுத்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.