ரோஜாவின் ப்ளு பிலிம் விவகாரம்… நாசூக்கா ரஜினியை உள்ளே இழுத்து விட்ட ரோஜா… சூடு பிடிக்கும் ப்ளூ பிலிம் விவகாரம்..

0
Follow on Google News

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது கைதை நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான ரோஜா, தொண்டர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். இந்தநிலையில், நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என ஆந்திர முன்னாள் அமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியுமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்திருந்தார்.

மேலும், நடிகை ரோஜா நடித்ததாக ஒரு வீடியோவையும் சட்டசபையில் பண்டாரு காட்டியுள்ளார். இதற்கு பெண் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ரோஜா கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “நான் நிர்வாண படத்தில் நடித்ததாகக் கூறி, சித்ரவதை செய்கின்றனர். சட்டப்பேரவையிலும் சி.டி.க்கள் காட்டப்பட்டன.

ஆனால், அதில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டுப் பொருளாக நடத்துகிறது. எனது புகழ், முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வாய்க்கு வந்தபடி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியிருக்கிறார். அவரை யாரும் கண்டிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “சட்டம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பேசி, அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சி நினைத்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்” இவ்வாறு ரோஜா கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக பல நடிகைகள் ரோஜாக்கு சப்போர்ட் செய்தனர். இந்நிலையில் ரோஜா ஒரு நேர்காணலில் நாசூக்கா ரஜினியை உள்ளே இழுத்து விட்டுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது, “யாரைப் பற்றி யோசிக்க வேண்டாம் என தைரியம் கொடுக்கிறார்கள். மனரீதியாக தொந்தரவு கொடுத்து அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும் என்பதை திட்டமிடுகிறார்கள். என்டிஆரின் நூற்றாண்டு விழாவில் என் டி ஆர் ஐ பற்றி பேசாமல் சந்திரபாபு நல்லவர் என ரஜினி புகழ்ந்து பேசினார். மீண்டும் சந்திரபாபு முதலமைச்சர் ஆக வேண்டும் என பேசி உள்ளார். ரஜினிக்கு ஆந்திராவில் மரியாதை உள்ளது.

ஒரு தப்பானவருக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுகிறார். ரஜினியுடன் பேச்சுக்கு மரியாதை உள்ளது அதனை அவர் புரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும்.” என்றார்.மேலும், “ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக அரசியலுக்கு வருகிறேன். வருகிறேன் எனக் கூறுகிறார். ஆனால் அரசியலுக்கு வரவில்லை. சினிமா வேறு அரசியல் வேறு. எம்ஜிஆர் ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை பலர் வந்து தோல்விதான் அடைந்துள்ளனர். படம் நல்லா இருந்தாதான் ஓடும்,

கதை நல்லா இல்லை தங்களுக்கு பிடித்தவர் என்பதற்காக ஓடாது, அதேபோல் அரசியலில் மக்கள் நம்பிக்கை வைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். பொதுகூட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்கு மட்டுமே சினிமாவின் புகழ் உதவும். ஆனால் தேர்தலுக்கு வந்த பிறகு மக்களுக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை கொடுக்குறாங்க என்பதை பொறுத்து தான் அரசியல் பயணம் அமையும்.” என்று பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, “விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு பதில், அளித்தவர் மக்கள் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோ அவர்களையே வெற்றி பெற முடியும். திரைத்துறையை வேலை பார்த்ததைவிட அரசியல் மிகவும் கடினமாக உள்ளது. நிறைய வார்த்தைகள் கடினமான வார்த்தைகள் அனுபவிக்க வேண்டி உள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “சந்திரபாபு நாயுடு கட்சியினர் என்னை பற்றி பேசும்பொழுது ரஜினிகாந்த் குரல் கொடுத்திருக்க வேண்டும். அவருடன் இரண்டு படத்தில் நடித்திருந்தேன் என்னைப் பற்றி அவருக்கு தெரியும். பெண்ணை பற்றி தவறாக பேசக்கூடாது என ரஜினி சார் பேசியிருந்தால் அவருக்கு நான் சல்யூட் அடித்து இருப்பேன்” என கூறினார்.