ரம்யா பாண்டியன் காதல் கணவர் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..!

0
Follow on Google News

நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் அருண் பாண்டியனின் தம்பி துரை பாண்டியன் மகள் தான் நடிகை ரம்யா பாண்டியன், இவருக்கு ஒரு தங்கை தம்பி உள்ளது, தம்பி துபாயில் வேலை செய்கிறார், தங்கை மாடலிங் துறையில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் தந்தை துரைப்பாண்டியன் இறந்து விடுகிறார், அவர் தாய் தான் குடும்பத்தை வளர்த்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அருண் பாண்டியன் தன்னுடைய பெரியப்பா என்றாலும் கூட தங்கள் குடும்பத்தை பெரிதாக அருண் பாண்டியன் கண்டுகொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது. ஆனால் அருண்பாண்டியன் பெரும் கோடீஸ்வரர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த வகையில் தன்னுடைய மகள் கீர்த்தி பாண்டியனை சினிமாவில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் அறிமுகம் செய்து வைத்தவர்.

தம்பி மகள் ரம்யா பாண்டியனுக்கு சினிமா ஆசை இருந்தும் அருண்பாண்டியன் தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. தன்னுடைய சுய முயற்சியில் சினிமாவிற்குள் நுழைந்த ரம்யா பாண்டியன், ஆரம்பத்தில் மிக பெரிய அளவில் பேசப்பட்டாலும் கூட சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைக்க அவரால் முடியவில்லை.

இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள ஒரு யோகா பயிற்சி மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்ற ரம்யா பாண்டியன் அங்கே யோகா மாஸ்டர் தவான் என்பவரை காதலிக்க தொடங்கியுள்ளார், இவர்கள் கொரோன காலத்தில் இருந்து காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கோவில் கோவிலாக சென்று இருவரும் தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளார்கள்.

திருமணம் செய்வதற்கு முன்பே இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், தன்னுடைய காதலனான யோகா மாஸ்டர் தவான் ஆசைப்படியே கங்கை நதிக்கரையோரம் ரம்யா பாண்டியன் மற்றும் தவான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கீர்த்தி பாண்டியன் மற்றும் அவருடைய கணவர் இருவரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ரம்யா பாண்டியன் எந்த முடிவு எடுத்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் தான் முடிவு எடுப்பார் என்பதால் இந்த திருமணம் கூட குடும்பத்தில் கலந்து ஆலோசிக்காமல் அவரால் எடுத்த முடிவு தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டினை திருமணம் செய்துள்ள தவான் யார் என்ற சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ரம்யா பாண்டியன் திருமணம் செய்துள்ள தவான் இந்தியாவில் தலைசிறந்த யோகா மாஸ்டர்களின் ஒருவராக அறியப்படுகிறார்.

இந்தியாவின் ஆன்மீக தலைவர் என்று அறியப்படும் ஸ்ரீ ஸ்ரீ குரு தேவ் யின் மிக நெருக்கமான நபர்களில் லோவா தவானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவராத்திரி காலகட்டங்களில் இந்தியா முழுவதும் பயணித்து சிறப்பு யோகா வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு புகழ் பெற்றவர் ரம்யா பாண்டியனின் கணவன் லோவல் தவான்.

இது மட்டும் இல்லாமல் தனியாக ஆர்ட் ஆஃப் லிவிங் என்ற ஒரு மையத்தை உருவாக்கி அதனை நடத்தி வரும் லோகன் தவான், இந்த மையம் மூலம் லைப் கோச்சாகவும், கீழராகவும் செயல்பட்டு வருகிறார், அதாவது மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடியவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பொருளாதார ரீதியாகவே ஒரு கோடீஸ்வரர் தான் ரம்யா பாண்டியன் திருமணம் செய்துள்ள லோவா தவான், ஆனால் அவர் வாழ்க்கை ஆடம்பரம் இல்லாமல் மிக சிம்பிளாவே வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக ஆன்மீகத்தின் மீது யோகா மீது மிக ஈடுபாடு கொண்டவர் ரம்யா பாண்டியன் கணவர் லோவா தவான், அதனால் தான் அவர் கங்கை நதியோரம் தன்னுடைய காதலி ரம்யா பாண்டியனை கரம் பிடித்ததாக கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here