இந்தியாவை சேர்ந்த இஸ்ரோ வின்ஞானிகளின் கடுமையான போராட்டத்திற்கு பின்பு சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தென் துருவத்தில் கால் பாதித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிக பெரிய சாதனையாக கருதப்படும் நிலையில், வின் வெளி ஆராய்ச்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்துள்ளது, ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமை அடைய செய்துள்ளது.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய இந்த செயலை ஒவ்வொரு இந்தியனும் கொண்டாடி வரும் நிலையில், சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் அண்டை நாடான பாக்கிஸ்தானில் இருந்து வந்துள்ள பாராட்டு செய்தி குறிப்பாக பாக்கிஸ்தானில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி என்பவர் சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் சென்றுள்ளதற்கு இஸ்ரோவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தவர்.
மேலும் இந்தியாவுடனான விரோதத்தை தவிர, சந்திரயான் 3 மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் வரலாறு படைத்த இஸ்ரோவை நான் உண்மையிலேயே வாழ்த்துகிறேன் என்றும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி அனைத்து அம்சங்களிலும் எவ்வளவு அளவிற்கு விரிவடைந்துள்ளது என்பதை காணலாம். இந்த சாதனையை செய்ய பாகிஸ்தானுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று தசாப்தங்கள் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, இன்று நம் துயரத்திற்கு நாம் தான் காரணமே தவிர வேறு யாரும் இல்லை. வெட்கத்துல தலைகுனிய வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி வாழ்த்து தெரிவித்துள்ளது, அந்த நாட்டில் அவருக்கான எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், மேலும் இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நாம் எப்போதும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிப்பதை தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்தியா சாதித்தது சந்தோஷம் அளிக்கிறது.
நாம் இந்தியாவுடன் இது போன்ற விஷயங்களில் தான் போட்டி போட வேண்டும் மாறாக நமக்குள்ளே நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளதற்கு இந்தியர்கள் சமூக வலைதள வாயிலாக நன்றியை தெரிவித்து வரும் நிலையில், பாக்கிஸ்தானில் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி இந்தியாவின் சாதனையை துணிந்து பாராட்டி வருவது ஒரு பக்கம் இருந்தாலும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இந்தியாவில் பலரது எதிப்புக்கு உள்ளானார் சானியா மீர்சா. இந்தியாவில் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் 40க்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் பலியான நிலையில்.இதுகுறித்து சானியா மிர்சா கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருவது குறித்து அப்போது விமர்சனம் எழுந்தது.
தனக்கு எதிராக எழுந்த விமர்சனத்துக்கு பதில் தரும் விதத்தில் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் சானியா மீர்சா, அதில் மக்கள, மேலும் வெறுப்பை பரப்புவதற்கு பதில் அமைதிக்கான பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால் எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் தான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்,மொட்டை மாடியில் வந்து நின்று கத்த வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்த சானியா.
குறிப்பாக புல்வாமா தாக்குதல் குறித்து தாம் பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சானியா மிர்சா தெரிவித்திருந்தது பெரும் பிரச்சனையாக அப்போது உருவெடுத்தத. சானியா இந்த கருத்துக்கு பாகிஸ்தான் மக்கள் ஆதரவாகவும் பல இந்தியர்கள் எதிராகவும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தால் பாக்கிஸ்தான் மக்களின் எதிர்ப்பை பெற வேண்டும் என அமைதியாக இருந்த சானியா மிர்சா.
குறிப்பாக இந்தியாவை சேர்ந்த சானியா மிர்ஷா பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்ட பின்பு புல்வாமா தாங்குதலுக்கு மொட்டை மாடியில் இருந்து கத்த தேவையில்லை என இந்தியர்களின் மனம் புண்படும்படி கருத்து சொல்லியிருந்த நிலையில், தற்பொழுது பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவர் பாக்கித்தானில் தனக்கு எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே துணிந்து இந்தியாவை பாராட்டியுள்ளது சானியா மிர்ஷா போன்றோருக்கு சவுக்கடியாக அமைத்துள்ளது என பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கது.