யாரும் பட வாய்ப்பு தரல.. பாதை மாறிய நடிகை ஓவியா… என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

தான் நடித்த படங்களை விட பிக்பாஸ் மூலம், தனக்கான ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் தான் நடிகை ஓவியா. இவர் களவாணி படம் மூலம் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்து, கிராம பாங்கான கேரக்டர்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இவர் நடித்த முதல் படமே செம ஹிட் ஆனதால், சினிமா துறையின் முன்னணி கதாநாயகியாக ஓவியா வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே அமைந்ததால் ஹோம்லி கேரக்டரில் இருந்து அதிரடியாக கவர்ச்சி கேரக்டர்களில் இறங்கி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 1க்குள் நுழைந்த ஓவியா, அங்கு சென்று பெரும் புயலையே கிளப்பி இருந்தார். ஏனெனில் அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் இவரால் பல சர்ச்சைகள் கிளம்பியதோடு, நான் எப்படி இருப்பேனோ அப்படி தான் இருப்பேன் என, உண்மையை மட்டுமே எடுத்துரைத்த ஓவியாவுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக தொடங்கினர். குறிப்பாக ஓவிய ஆர்மி என்ற ஒரு படையே அவருக்காக கிளம்பியது.

மேலும் இவர் டைட்டில் வின்னரான ஆரவ்-ஐ காதலித்தது மற்றும், மருத்துவ முத்தம், ஷட்டப் பண்ணுங்க என்ற வார்த்தைகளுக்கெல்லாம் சொந்தக்காரரும் இவர்தான். இந்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது, பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எதிர்பார்த்த ஓவியாவுக்கு, மிகப்பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் டிப்ரஷனில் மூழ்கி, குடிக்கு அடிமையான ஓவியா தனது instagram பக்கத்திலும் குடித்துவிட்டு செய்த செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடிப்பு திறமை இருந்தாலும், சரியான படம் அமையாததாலும், பட வாய்ப்புகள் தர மறுப்பதாலும், நடிகை ஓவியா கடந்த சில வருடங்களாகவே மன உளைச்சலில் இருந்து வருகிறார். இதனால் இந்த மன உளைச்சலில் இருந்து மீள முடிவெடுத்து குடிக்கு அடிமையாகிவிட்டார். பின்னர் தனது நண்பர்களின் முயற்சியால், கொஞ்சம் கொஞ்சமாக குடியிலிருந்து விடுபட்டு, மீண்டும் வாய்ப்புக்காக ஓடி இருக்கிறார்.

அந்த சூழலில் தான் நடிகை ஓவியாவை நிறைய பேர், மிஸ் யூஸ் செய்வதாகவும், குறிப்பாக பண விஷயத்தில் என்னை நிறைய பேர் ஏமாற்றி இருக்கிறார்கள், Innocent-ஆக இருப்பது எனது தப்பா என்றும், இதை என்னால் ஒன்றுமே பண்ண முடியவில்லை, இதுதான் என் வாழ்க்கையில் அதிகமாக நடந்து வருகிறது என மீண்டும் டிப்ரஷன் ஆகி, குடிக்கு அடிமையாகி விட்டார்.

மேலும் அவரின் கனவாக இருக்கும் சினிமாவில் நடிக்கவும், அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள், அப்படி அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் நடிகையாக வரவேண்டும் என எந்த அவசியமும் இல்லை என்று, தன்மானத்திற்காக, பல வாய்ப்புகளையும் தூக்கி வீசியிருக்கிறார். தற்போது 50 வயதாகும் நடிகைகளே சினிமாவில் நடித்துவரும் சூழலில், 33 வயதே ஆகும் ஓவியாவுக்கு ஏன் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் தான் ஓவியா, நடிகை சாவித்திரி போல் 24 மணி நேரமும் குடித்துக்கொண்டிருக்கிறார் என பகிர் தகவல்களையும் கிளப்பியுள்ளனர். சினிமா வாய்ப்பே கிடைக்காத துயரத்திலும், தனக்கான வாய்ப்பை வேறொருவர் தட்டி தூக்கி விடுகிறார் என்றும், தனது நடிப்பிற்கான பணத்தை கூட முழுவதுமாக கொடுக்காமல் அதிலும் கமிஷன் அடித்து என்னை ஏமாற்றி விடுகின்றனர் என, வாழ்க்கையே வெறுத்துப் போய் 24 மணி நேரமும் சரக்கும் கையுமாக நடிகை ஓவியா இருக்கிறார்.

இந்த நிலையில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், கண்ணாடி கிளாஸில் மதுவை ஊற்றி பக்கத்தில் வைத்துக் கொண்டு, சைடிசை வைத்து அதை ருசிப்பது போல புகைப்படம் எடுத்து பகிர்ந்ததோடு, மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறுவது போல் போஸ்ட் போட்டு உள்ளார். ஆனால் அது அட்வைஸ் போஸ்ட் அல்ல, நடிகை ஓவியாவின் டிப்ரஷன் போஸ்ட் என ரசிகர்கள் ஓவியாவின் இந்த நிலையை பார்த்து வருத்தம் தெரிவித்தும் வருகின்றனர்.