வாடகை தாய் முறை என்பது குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோர்களுக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் இதை பல சினிமா பிரபலங்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குழந்தை பெற்றுக் கொண்டால் தங்கள் அழகு போய்விடும், மேலும் பத்து மாதம் ஒரு கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்கு பல சிரமங்களை அந்த பெண் எதிர்கொள்கிறார்.
இப்படி பல தியாகங்களை செய்துதான் ஒரு தாய்க்கான அந்தஸ்தை ஒரு பெண் அடைகிறாள். ஆனால் இது போன்ற சிரமங்களை எதிர்கொள்ள விருப்பமில்லாத பெண்கள் வாடகை தாய் முறையை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணின் கர்ப்பப்பை பலவீனமாக இருந்தாலோ, அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் கர்ப்பமாக முடியாமல் இருந்தாலோ, குழந்தையை சுமக்க முடியாமல் இருக்கும் அந்த பெண்ணிற்காக வேற ஒரு பெண் அந்த குழந்தையை பெறுவது வாடகை தாய் முறையாகும்.
இப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள இந்தியாவில் பல விதிமுறைகள் உள்ளன, இதில் முக்கியமானது வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்று கொள்ள விரும்பும் தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 5 வருடம் நிறைவடைத்திருக்க வேண்டும், ஆனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் முடிந்த 4 மாதத்தில் வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளது சட்டவிதிப்படி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தை விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி இவர்கள் குழந்தை பெற்றிருந்தால், இருவருக்கும் சட்டப்படி 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்து இருந்தனர். இருந்தாலும் இந்த விவகாரத்தில் எப்படி நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தார்கள் என்பது மிக பெரிய கேள்வி குறியாக உள்ளது.
இந்த நிலையில் நயன்தாராவுக்கு தாய்மை என்றால் என்ன என்று பாடம் புகட்டியுள்ளார் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா.. கடந்த 2021ம் ஆண்டு சினேகன் அவரை விட 15வயது குறைவான கன்னிகா என்கிற சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்டார், திருமணம் செய்த போது சினேகனுக்கு வயது 43, அவருடைய மனைவி கன்னிகா வுக்கு சுமை 27 என கூறப்பட்டது.
இதனால் வயதானவரை கன்னிகா திருமணம் செய்து கொண்டார் என்கிற கேலி கிண்டல் ஒரு பக்கம் இருந்தாலும், திருமணத்திற்கு பின்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இருவரும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்து, இன்று வரை பல தம்பதியினருக்கு முன்னுதாரணமாக, ஒரு சிறந்த தம்பதியினராக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் வயதை காரணம் காட்டி சினேகன் – கன்னிகா இருவரையும் கேலி கிண்டல் செய்தவர்கள் கூட தற்பொழுது அவர்களை வாழ்த்தும் வகையில் சிறந்த தம்பதியினராக வாழ்ந்து வருகிறார்கள் சினேகன் – கன்னிகா தம்பதியினர்.
இந்நிலையில் சினேகன் – கன்னிகா இருவரின் காதல் அடையாளமாக இரண்டு தேவதைகளை பெற்று தாய் – தந்தையாக மாறியுள்ளார்கள், அந்த வகையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் நயன்தாரா இருக்கும் சினிமா துறையில், பத்து மாதம் சுமந்து இரட்டை பெண் குழந்தை பெற்று எடுத்துள்ள கன்னிகா, தாய்மை என்றால் என்ன என்று நடிகை நயன்தாராவுக்கு பாடம் எடுத்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.