நயன்தாரா ஓவர் அட்டூழியம்… படப்பிடிப்பில் வெளுத்து வாங்கிய சுந்தர் சி..

0
Follow on Google News

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா, முதலில் பொள்ளாச்சியில் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்காக லொகேஷனை தேர்வு செய்த இயக்குனர் சுந்தர் சி, படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளை ஆயத்தமாக தொடங்க இருந்த நிலையில், நயன்தாரா வழக்கம் போல் மற்ற சினிமா இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் போடுவது போல் மூக்குத்தி அம்மன் படத்திலும் கண்டிஷனை போட்டிருக்கிறார்.

அதில் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால், அந்த இரண்டு குழந்தைகளையும் தினமும் பார்க்க வேண்டும், ஆகையால் சென்னையில் இருக்கும் எனது வீட்டிற்கு நான் தினமும் திரும்ப வேண்டும், அந்த வகையில் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த வேண்டும், பொள்ளாச்சிக்கு என்னால் வர முடியாது என்று நயந்தாரா தெரிவித்திருக்கிறார். அப்போதே சுந்தர் சிக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருந்தாலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐ சரி கணேசன், நயன்தாரா இழுக்கும் இழுவைக்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறாராம், நயன்தாரா என்ன சொன்னாலும் சரி சரி என்று தலையாட்டிக் கொண்டு, சுந்தர்சியை சமாதானம் செய்து நயன்தாராவுக்கு ஏற்றார் போன்று பொள்ளாச்சியில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ் ஹரி கணேசன்.

இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் வழக்கம்போல் மற்ற இயக்குனர்களிடம் படப்பிடிப்பு தளத்தில் அட்ராசிட்டி செய்வது போன்று நயன்தாரா சுந்தர் சி இடமும் தன்னுடைய சேட்டையை காண்பித்திருக்கிறார். அதாவது பொதுவாகவே நயன்தாரா படப்பிடிப்புக்கு வரும் பொழுது அந்தப் படப்பிடிப்பில் கூட்டம் இல்லை என்றாலும் கூட அவரைச் சுற்றி பவுன்சர்கள் அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நயன்தாரா.

மேலும் அங்கே யாருமே இல்லை என்றாலும் கூட நயன்தாரா ஒற்றையால் தான் வருகிறார், ஆனால் அவரை சுற்றி இருக்கிற பவுன்சர் விலகு விலகு, விலகு விலகு என்று வடிவேலு நகைச்சுவை காட்சிகள் வருவது போன்று நயன்தாராவை அங்கே படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வருவதாக,,அந்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கின்றவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாராவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்து கோபப்பட்ட சுந்தர் சி, நேரடியாக நயன்தாராவை டீல் செய்வதை விட்டுவிட்டு, தன்னுடைய உதவி இயக்குனர் மூலமாகவே டீல் செய்து வருகிறார் வருகிறார்.

அந்த வகையில் மூக்குத்தி அம்மன் படத்தின் ஒரு காட்சிக்காக நயன்தாராவுக்கு காஸ்டியூம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நயன்தாரா உதவி இயக்குனரிடம் இந்த காஸ்டியூம் எல்லாம் என்னால் அணியவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார். உடனே அந்த உதவி இயக்குனர் சுந்தர் சி இடம் தெரிவிக்க, அதெல்லாம் முடியாது இந்த காஸ்டிம் அணிந்தே ஆக வேண்டும் என்று சுந்தர் சி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து உதவிய இயக்குனர் நயன்தாராவிடம், இயக்குனர் இந்த காஸ்ட்யூம் தான் போட்டு நடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள் மேடம் என்று தெரிவித்தாலும், சுந்தர் சி மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் நயன்தாரா அந்த உதவி இயக்குனரிடம் காட்டி இருக்கிறார் நயன்தாரா.ஒரு கட்டத்தில் மிகவும் அவமரியாதையுடன் அந்த உதவி இயக்குனரிடம் நயன்தாரா பேச அந்த காஸ்டிமை போட்டு நடித்து இருக்கிறார் நயன்தாரா.

இதேபோன்று மற்றொரு காட்சிக்கு காஸ்டியூம் கொடுக்கப்பட்டதுக்கும், மீண்டும் இந்த காஸ்டியூம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மீண்டும் நயன்தாரா தன்னுடைய சேட்டைகளை காண்பித்திருக்கிறார், உடனே அந்த உதவி இயக்குனர் மீண்டும் சுந்தர்சியிடம் சார் என்ன சார் இந்த மேடத்தோட பெரிய அக்கப்போரா இருக்கு சார் என்று சொல்ல, அதற்கு சுந்தரி சி இந்த காஸ்டில் தான் போட்டு நடிக்கச் சொன்னார் இயக்குனர் என்று சொல் என உதவியக்குனரிடம் தெரிவித்திருக்கிறார்.

உதவி இயக்குனர் மேடம் இந்த கஸ்ட்டும் தான் போட வேண்டும் என இயக்குனர் ஸ்ட்ரிக்டா சொல்கிறார் என்றதும், கோபத்தில் அந்த உதவி இயக்குனரை கண்டபடி திட்டி இருக்கிறார் நயன்தாரா, திட்டிவிட்டு அந்த காஸ்டியூம் அணிந்து நடித்திருக்கிறார், அந்த உதவி இயக்குனர் ஒரு கட்டத்தில் நயன்தாரா திட்டியதை பொறுத்து கொள்ளாமல் கோபித்துக் கொண்டு அந்த படப்பிடிப்பு தளத்தை விட்டு சென்று விட்டாராம், பின்பு சுந்தர்சி அந்த உதவி இயக்குனரை வரவழைத்து சமாதானம் பண்ணி மீண்டும் பணியாற்ற வைத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here