நடிகை நயன்தாரா வாழ்க்கையை அவர் நடித்த ராஜா ராணி படத்திற்கு முன்பு, அதற்கு பின்பு என்று பிரித்து பார்க்க வேண்டும். ராஜா ராணி படத்திற்கு முன்பு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமா இருந்தாலும், முன்னனி இடத்தை பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் வாழ்க்கையில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்தித்து வந்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப கட்டத்தில் நடிகர் சிலம்பரசனை காதலித்து தோல்வி அடைந்தார்.
அதன் பின்பு நடிகர் பிரபுதேவாவை நீண்ட வருடம் காதலித்து இறுதியில் அதிலும் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு காதலிலும் தோல்வி அடைந்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த நயன்தாரா, ராஜா ராணி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால் ராஜாராணி படத்தில் நடிப்பதற்கு முன்பு, நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து பிரபுதேவாவின் இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா.
அவர் மதம் மாறிய மிக குறுகிய காலத்தில் பிரபுதேவா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இந்த நிலையில் நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பின்பு பின்பு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழியுடன், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் டாப் நடிகையாக பல வந்தார். அவருடைய சம்பளத்தை பிற நடிகைகள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தில் உயர்ந்தது.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியதை தொடர்ந்து பிசி நடிகையாக, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க தொடங்கினார். இந்நிலையில் நயன்தாரா கால் சீட்காக அவருடைய வீட்டின் முன்பு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை உருவானது.இதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய நயன்தாரா, தான் மதம் மாறிய பின்பு தான் என்னுடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்தது என்கிற நம்பிக்கை நயன்தாராவுக்கு பிறந்துள்ளது.
பிரபுதேவா உடனான காதல் திருமணம் வரை சென்று நின்றது ஒரு விதத்தில் நல்லது தான். பிரபு தேவாவை திருமணம் செய்து கொண்டிருந்தால் என்னுடைய சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும், மேலும் மதம் மாறிய பின்பு தான் பிரபு தேவா பற்றிய உண்மையை தனக்கு இறைவன் வெளிச்சம் போட்டு காண்பித்தார். அதனால் பிரபு தேவா உடனான திருமண பந்தத்தில் இருந்து தப்பித்து கொண்டேன் என்று நம்பும் நயன்தாரா.
அதே நேரத்தில் மதம் மாறிய பின்பு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருகிறேன், மேலும் இதற்கு முன்பு இரண்டு காதலின் தோல்வி அடைந்தாலும், விக்னேஷ் சிவன் என்கிற அற்புதமான மனிதரை என் வாழ்வில் இறைவன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் என்கின்ற மகிழ்ச்சியில், விக்னேஷ் சிவனை காதலித்த போது, காதலனுடன் உடன் இந்தியா முழுவதும் உள்ள இந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து வந்தார் நயன்தார.
தீவிர ஒரு இந்து பக்தராக மாறிய நயந்தாரா, தற்பொழுது வரை இந்து சமய பழக்கவழக்கங்களை மிகத் தீவிரமாக கடைபிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவருடைய வாழ்க்கையில் மதம் மாறிய பின்பு தான் பல அதிசயங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படும் நயன்தாரா, அவருடைய திருமணத்தைக் கூட திருப்பதியில் நடத்துவதற்கு தான் ஏற்பாடு செய்துள்ளார், ஆனால் அங்கே கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததால் மஹாபலிபுரம் அருகே தன்னுடைய திருமணத்தை நடத்தினார்.
இருந்தும் திருமணம் முடிந்த உடனே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து கொண்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் தன்னுடைய கழுத்தில் கட்டிய தாலியை, உயிர் போன்று பார்த்து வருகிறார். படப்பிடிப்பின் போது கூட தாலியை கழட்ட மாட்டேன், வேண்டுமென்றால் தாலியை மறைத்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன் என்று, தாலிக்கு உரிய மரியாதையை கொடுத்து வருகிறார் நயன்தாரா என கூறப்படுவது குறிப்பிடதக்கது.