நயன்தாரா உடை என்னுடைய காசு… போட்டுடைத்த தனுஷ்…

0
Follow on Google News

நயன்தாரா – தனுஷ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா அவருடைய டாக்குமெண்டரி படத்தில், நானும் ரவுடி தான் படம் தொடர்பான சில காட்சிகளை பயன்படுத்தி இருந்தார். இதில் தனுஷ் அனுமதியில்லாமல் அந்த காட்சிகளை பயன்படுத்திய நயன்தாரா, டாகுமெண்டரி படம் வெளியாவதற்கு முன்பு, தனுஷை கண்ட படி வசைபாடி பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா.

இந்நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய அனுமதி இல்லாமல் நயன்தாரா டாக்குமெண்டரி படத்தில் நானும் ரவுடி தான் படம் தொடர்பான காட்சிகளை பயன்படுத்தியது தொடர்ப்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கு விசாரணையில், நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,”நானும் ரெளடிதான் படத்தில் இடம்பெறும ஒவ்வொரு கதாபாத்திரம் உள்பட அனைத்து விஷயங்களுக்கான காப்புரிமை அனைத்தும் என்னிடம் உள்ளது என தெரிவித்தவர்.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா அணிந்திருக்கும் ஆடைகள் மீது கூட காப்புரிமை உள்ளது. மேலும், உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டுள்ளார். எனவே, இதை கருத்தில் கொண்டு வழக்கை தடை செய்யாமல் விசாரணைக்கு எடுக்கொள்ள வேண்டும்” என்ற வாதத்தை முன் வைத்தார் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்.

மேலும் தொடர்ந்து வாதிட்ட தனுஷ் தரப்பு வழக்கறிஞர், தனது டாக்குமென்டரியில் நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சியாக 28 விநாடி விடியோவை பயன்படுத்தியதன் மூலம், நயன்தாரா பதிப்புரிமை சட்டம் 1957இன் படி விதியை மீறியுள்ளார். எனவே இந்த சிவில் வழக்கு நீதிமன்றத்தால் நடத்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டது தனுஷ் தரப்பு.

இதன் பின்னர் நயன்தாராவின் டாக்குமெண்டரி படத்தை விலைக்கு வாங்கி வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்தசாரதி, உண்டர்பாரின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் இல்லை. மாறாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே உண்டர்பாரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தவர்.

தயாரிப்பு நிறுவனம் 1957ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் 62வது பிரிவின்படி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது கடிதங்கள் காப்புரிமைச் சட்டம், 1865 இன் பிரிவு 12 இன் படி நெட்பிளிக்ஸ் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கும், மும்பை உயர் நீதிமன்றத்தையோ அணுகியிருக்க வேண்டும்” என நெட்பிளிக்ஸ் தரப்பு வாதிட்டது,

இதற்கு பதில் அளித்த தனுஷ் தரப்பு,, 2015ஆம் ஆண்டு நானும் ரெளடிதான் படத்துக்காக நயன்தாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, தனுஷின் உண்டர்பார் நிறுவனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் இயக்கி வந்தது. படத்தின் ஒரு பகுதி சென்னையில் தான் படமாக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அந்த ஆவணப்படம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டது.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உண்டர்பாருக்கு முழு உரிமை உண்டு என தனுஷ் தரப்பு தெரிவிக்க, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி அப்துல் குத்தோஸ், வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனுஷ் – நயன்தாரா விவகாரம் நீதிமன்றம் வரை வந்து, நயன்தாரா ஆடை வரை உரிமை உள்ளது என தனுஷ் தரப்பு வாதிடும் அளவுக்கு தனுஷ் – நயன்தாரா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here