அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்படலாம் என்கின்ற ஒரு தகவல் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக ஏற்ப்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நடிகர் அஜித் தான் என்கின்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்த பொழுதையே தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு அளித்த நடிகர் அஜித்.
அந்த படத்திற்கான அனைத்து வேலைகளையும் தயார் செய்து வைக்கும்படி விக்னேஷ் சிவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், கதை பிடிக்கவில்லை என கடைசி கட்டத்தில் இயக்குனரை மாற்றிவிட்டார் அஜித். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட்டானார்.
மகிழ் திருமேனி இயக்கும் அஜித் நடிக்க இருக்கும் படத்திற்கு அதிகாரப்பூர்வ விடாமுயற்சி என டைட்டில் வெளியிடப்பட்டது.விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் எதிர்பார்த்த நிலையில், விடா முயற்சி படத்தில் நடிப்பது குறித்து அஜித் எந்த முயற்சியும் செய்யாததால் அந்த படம் கைவிடப்படலாம் என்றும் தற்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு வாரமும் விடாமுயற்சியின் படத்தில் அப்டேட் வந்துவிடும், இதோ அடுத்த மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கிவிடும். இதோ இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று பரபரப்பு தகவல் வெளியானாலும். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த ஒரு அறிவுரையும் தென்படவில்லை.
இந்த நிலையில் விடாமுயற்சி படம் தொடங்கப்படாமலே இப்படி பெரும் சிக்கலில் சிக்கி தவித்து வருவதற்கு காரணம் நயன்தாராவின் சாபமே என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. நடிகர் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்று இவ்வுலகிற்கு தெரிந்த பின்பு, மேலும் அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கின்ற கூடுலும் தகவலும் வெளியாகி, மேலும் நடிகர் சந்தானம் காமெடி நடிகராக விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் படத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்,
அவருக்கு சம்பளம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பேச ப்பட்டது என்ற விக்னேஷ் சிவன் அஜித் படத்திற்கான அப்டேட் நாளுக்கு நாள் வந்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் கதையை ஒரு காரணமாக காட்டி விக்னேஷ் சிவனை தன்னுடைய படத்திலிருந்து வெளியேற்றினார் அஜித், ஒரு உச்ச நடிகர் படத்தில் கமிட்டாகி கதை பிடிக்கவில்லை என ஒரு இயக்குனர் வெளியேற்றப்பட்டதால்.
அந்த இயக்குனரின் சினிமா கேரியர் என்ன ஆகும் என்பதை சற்றும் யோசிக்காத அஜித், விக்னேஷ் சிவனை வெளியேற்றதின் விளைவு இதுவரை விக்னேஷ் சிவன் அடுத்து எந்த ஒரு படமும் பண்ண முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவனை அஜித் வெளியேற்ற முடிவு செய்த போது நயன்தாராவே நேரடியாக அஜித்தை பலமுறை தொடர்பு கொண்டு விக்னேஷ் சிவனை வெளியேற்றுவது பற்றி மறு பரிசீலனை செய்யுங்கள் என கேட்டுள்ளார்.
மேலும் உங்கள் கையில் தான் விக்னேஷ் சிவன் சினிமா கேரியரே அடங்கியுள்ளது என்று அஜித்திடம் எவ்வளவோ நயன்தாரா கெஞ்சி கேட்டும் அஜித் செவி சாய்க்கவில்லை, இதனால் நயன்தாராவின் சாபம் தான் என்று விடா முயற்சி படம் தொடங்கப்படாமலே இருக்கிறது என்றும் அதே நேரத்தில் விடாமுயற்சி கைவிடப்பட்டால் விக்னேஷ் சிவன் போன்று மகிழ் திருமேனியும் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பார்.
அந்த வகையில் அடுத்து அஜித்தை நம்பி எந்த ஒரு இயக்குனரும் கதை சொல்லக் கூட செல்ல மாட்டார்கள் என்றும், அதே நேரத்தில் தயாரிப்பு நிறுவனமும் இனி அஜித்தை வைத்து நம்பி படம் எடுக்க தயங்கலாம் இதனால் அஜித் என்ன தான் மிக பெரிய ஸ்டாராக இருந்தாலும் கூட அவருடைய சினிமா கேரியரே மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.