நடிகை நயன்தாரா படப்பிடிப்பு தளத்தில் செய்யும் அட்ராசிட்டி நாளுக்கு நாள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. பொதுவாகவே தான் நடிக்கும் படத்தில் பல கண்டிஷன்களை நயன்தாரா போடுவார். அந்த வகையில் தற்பொழுது நயன்தாரா புதிதாக போட்டுள்ள கண்டிஷன் அந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரை மிகப்பெரிய கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது படப்பிடிப்பு தளத்தில் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்படுவதை பார்ப்பதற்காக அங்கே ஒரு மானிட்டர் இருக்கும், அந்த மானிட்டரை இயக்குனர் காட்சிகள் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்ப்பார். அவருடன் உதவி இயக்குனர்கள் பார்த்து அது குறித்து கருத்து தெரிவிப்பார்கள். அதேபோன்று ஒளிப்பதிவாளர் கேமராவில் உள்ள மானிட்டரில் பார்த்துக் கொள்வார்.
அல்லது இயக்குனர் வைக்கப்பட்டுள்ள அந்த பெரிய மானிட்டரில் இயக்குனர் ஏதாவது ஒரு கருத்து சொன்னால், இயக்குநரும் ஒளிப்பதிவாரும் இணைந்து அது குறித்து கருத்து தெரிவித்து. இதை ரீ டேக் போகலாமா என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டு முடிவெடுப்பார்கள். தற்பொழுது நயன்தாரா புதிதாக ஒரு கண்டிஷனை தான் நடிக்கும் படத்தில் போட்டு இருக்கிறார்.
தான் நடிக்கும் படத்தில் அதுவும், தான் கலந்து கொள்ளும் படப்பிடிப்பின் பொழுது இரண்டு மானிட்டர்கள் வைக்க வேண்டும். ஒரு மானிட்டர் இயக்குனர் பார்ப்பதற்கு மற்றொரு மானிட்டர் தன்னுடைய உதவியாளர்கள் பார்ப்பதற்கு வைக்க வேண்டும் என்று நயன்தாரா கண்டிஷன் போட்டு உள்ளார் என கூறப்படுகிறது. அதுவும் நயன்தாராவின் உதவியாளர்கள் என்று யார் என்று கேட்டால் சிரிப்பே வந்துவிடும்.
நயன்தாராவுக்கு மேக்கப் போடக்கூடிய, நயன்தாராவிற்கு ஹேர் டிரஸ் செய்யக்கூடிய உதவியாளர்களுக்குத்தான் அந்த மானிட்டர்களை கேட்டுள்ளார் நயன்தாரா. அதாவது நயன்தாரா நடிக்கும் காட்சிகளை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர் ஒரு மானிட்டரில் பார்ப்பதும், நயன்தாராவின் உதவியாளர்கள் மற்றொரு மானிட்டரின் பார்த்தும் இதில் ஏதாவது சரியாக இல்லை என்றால் அங்கே நயன்தாராவின் இது சரிவரவில்லை என்று தெரிவிப்பார்களாம்.
உடனே நயன்தாரா இயக்குனரிடம் சொல்லி சார் இது சரியாக வரவில்லை ரீடேட் பண்ணலாம் என்று தெரிவிப்பாராம்.? இது இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு படப்பிடிப்பு தளத்திலும் நடக்காத ஒரு சம்பவம் அப்படி இருக்கையில் நயன்தாராவின் இந்த எல்லை மீறிய அட்ராசிட்டி வரவு மீறி சென்று கொண்டிருக்கிறது என படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் இயக்குனர்களும் ஒளிப்பதிவார்களும் செம்ம அப்செட்டில் இருக்கிறார்களாம்.
இருந்தாலும் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நயன்தாராவின் கண்டிஷன்களுக்கு மறுப்பு தெரிவிக்காததால், நயன்தாரா கேட்டதெல்லாம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது, அப்படி அந்த வரிசையில் தற்பொழுது புதிதாக போட்டுள்ள கண்டிஷன் தான் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இரண்டு மானிட்டர்கள் வைக்க வேண்டும் என்று நயன்தாரா கண்டிஷன் போட்டிருக்கிறார்
இப்படி கண்டிஷன் போடும் நயன்தாராவை தயாரிப்பாளர்கள் எதற்காக ஓடி ஓடி போய் ஒப்பந்தம் செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் போடும் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டால் நாடி இல்லை என்றால் வேறு ஒரு நடிகையை நாங்கள் நடிக்க வைத்துக் கொள்கிறோம் என்று ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் முடிவு செய்துவிட்டால் நயன்தாரா பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கி விடுவார், அதன் பின்பு அவராக முன்வந்து தயாரிப்பாளர் போடும் கண்டிஷனை ஏற்றுக் கொண்டு நடிக்க வந்து விடுவார் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.