நடிகை நயன்தாரா ரசிகர்களை மதிப்பாரா.? என்பதை தாண்டி இன்று அவரை மிகப்பெரிய உயரத்தில் அமர வைத்த சினிமா துறையையும் அவர் மதிக்க மாட்டார் என்கின்ற குற்றச்சாட்டு சினிமா துறையினர் மத்தியில் உண்டு. இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழில் ரீதியாக முதலீடு செய்து வரும் நிலையில், அவருடைய தொழில் தொடர்பான விளம்பர நிகழ்வு ஒன்றுக்கு மதுரைக்கு வந்தார்.
அந்த நிகழ்வுக்கு கூட சுமார் ஆறு மணி நேரம் தாமதமாக நயன்தாரா வந்ததாக கூறப்படும் நிலையில், இவர் ப்ராடக்ட்டை ப்ரோமோ செய்வதற்கே ஆறு மணி நேரம் தாமதமாக நயன்தாரா வருகிறார் என்றால், நான் வரும்வரை இவர்களெல்லாம் காத்து கொண்டிருக்கட்டும், அங்கே காத்துக் கொண்டிஇருப்பவர்களை விட நான் மேலானவர் என்கின்ற நயன்தாராவின் ஆனவன் தான் என்று விமர்சனம் ஒரு பக்கம் எழுந்தாலும் கூட,
ஒரு நிகழ்வுக்கு தாமதமாக வந்த நயன்தாரா அங்கே காத்திருந்தவர்களிடம் எனக்காக காத்திருந்த உங்களிடம் முதலில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லியிருந்தால், அது பெருந்தன்மையாக இருந்திருக்கும், ஆனால் அந்த ப்ரோக்ராமை ஆர்கனைஸ் செய்த ஒருவர் நயன்தாராவின் மனம் குளிரும்படி, அவரை புகழ்ந்து தள்ளிய விஷயம் தான் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அதாவது கொய்யாலே கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா இவன் என்று, நகைச்சுவை காட்சியில் வருவது போன்று, நயன்தாரா பற்றி அவர் சொன்ன வார்த்தைகள் இன்று மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது, நயன்தாரா நம்மள மாதிரி சாதாரண ஆட்கள் கிடையாது என்று சொல்வது, நயன்தாராவை விட அங்கு இருக்கிற அனைவருமே கீழானவர்கள் போன்று, நயன்தாரா என்னமோ வானத்திலிருந்து குதித்து அந்த தேவதூதன் போன்று கொடுத்த பில்டப் அமைத்து இருந்தது.
அதே நேரத்தில் நயன்தாரா நம்மள மாதிரி சாதாரண ஆட்கள் கிடையாது என்று ஒருவர் பேசும்போது, அங்கே இருந்த நயன்தாரா இப்படி எல்லாம் பேசாதீங்க நானும் உங்கள மாதிரி சாதாரண ஒரு மனிதர் தான் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் புகழ்ச்சிக்கு விரும்பியது போன்று, அங்கிருந்தவர் நயன்தாராவை பற்றி மக்களிடம் சாதாரண ஆள் என்று சொல்வதை ரசித்து கொண்டிருந்தார் நயன்தாரா.
சம்பவ இடத்தில் அவரை இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று நயன்தாரா சொல்ல வில்லை என்றாலும் கூட, மேடையில் அனைவரும் முன்னால் நயன்தாரா பேசும்பொழுது, நான் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கூறுகிறேன், என்னை உங்கள் மத்தியில் உங்கள மாதிரி சாதாரண ஆள் நான் கிடையாது என்று ஒருவர் சொன்னதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, அதை மறுக்கிறேன் என்றாவது நயன்தாரா பேசியிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு பேசவில்லை நயன்தாரா.