நடிகை நயன்தாரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில். லேடி சூப்பர் ஸ்டார் என என்னை அழைப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காது, எவ்வளவோ நான் கெஞ்சி கேட்பேன் தயவுசெய்து என் பேருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் என்று போடாதீர்கள் என்று, நான் எவ்வளவோ கெஞ்சி கேட்டாலும் கூட தயாரிப்பாளர்கள் அதையும் மீறி என்னுடைய பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை போட்டு விடுவார்கள் என ஆங்கில ஊடகங்களுக்கு நயன்தாரா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரித்ததில் நயன்தாரா இப்படி சொல்வது வடிகட்டிய பொய் என்றும், நயன்தாராவை வைத்து படம் எடுத்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் நயன்தாரா இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து எந்த அளவுக்கு டார்ச்சர் கொடுப்பார் என்பது நன்கு தெரியும். அதாவது நயன்தாரா நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரிடம் நடிப்பதற்கு முன்பே அக்ரீமெண்ட் போடும் பொழுது, லேடி சூப்பர் ஸ்டார் என்று பப்ளிசிட்டியிலும் டைட்டிலையும் போட வேண்டும் என்று ஒப்பந்தமே நயன்தாரா போடுவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாதே படத்தில் நயன்தாரா நடித்த போது, அந்த படம் முடியும் தருவாயில் அண்ணாத்தே படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சரை சந்தித்து தன்னுடைய பெயருக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியை போட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் இதற்கு மறுத்து விட்டார்கள்.
காரணம் ரஜினிகாந்தின் படம் என்பதால் ரஜினிகாந்த் தவிர்த்து வேறு யாருக்கும் அடைமொழி போட மாட்டோம் என்று கராராக நயன்தாராவிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா சும்மா விடவில்லை, அண்ணாத்தே படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவை என் பெயருக்கு பின்னால் லேடி சூப்பர் ஸ்டார் என போடாவேண்டும் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா, நயன்தாராவின் டார்ச்சர் தாங்க முடியாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சந்தித்து நயன்தாரா தனக்கு மிகப்பெரிய டார்ச்சரும் நெருக்கடி கொடுத்து வருகிறார், என்னால் இந்தப் படத்தில் வேலை செய்ய கூட முடியவில்லை அந்த அளவிற்கு நயன்தாரா டார்ச்சர் பண்ணுகிறார், அதனால் அவருடைய பெயருக்கு முன் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழியை போட்டு விடுங்கள் என்று சிவா தெரிவித்து இருக்கிறார்.
இதன் பின்பு அந்த தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவின் பெயருக்கு முன்பு லேடி சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியுடன் அந்த படத்தை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் ஆங்கில ஊடகத்தில் பேசிய நயன்தாரா ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திடமும் தன்னுடைய பெயருக்கு முன்பு எந்த ஒரு அடைமொழியும் போடக்கூடாது என்று கெஞ்சுவதாகவும், அவர்கள் தான் வம்படியாக போடுவது போன்று பொய் பேசும் நயன்தாரா.
திராணி இருந்தால், அவர் கடைசியாக நடித்த படங்களின் அக்ரிமெண்ட் காப்பியை வெளியிட்டால் உண்மை தெரிந்து விடும், அந்த அக்ரீமெண்ட் காப்பியில் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற தன்னுடைய பெயரை அடைமொழியை சேர்க்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், எதற்காக நயன்தாரா இப்படி பொய் பேசி சீன் போட்டு மாட்டிக்கொள்ள வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்