எதற்கு இந்த மானகெட்ட பொழப்பு… நார் நாராக கிழித்த நயன்தாரா..

0
Follow on Google News

நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷ் இருவருக்கும் இடையிலான பிரச்சனை மிக பெரிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தற்பொழுது தனுஷுக்கு – நயன்தாராவுக்கு இடையில் நடந்தது என்ன.? என்பது குறித்து முதல் முதலில் மனம் திறந்துள்ளார் நயந்தாரா, அது மட்டுமில்லாமல், வலைப்பேச்சு என்கிற சேனலில் சினிமா குறித்து போரணி பேசி வரும் அந்தணன், பிஸ்மி போன்ற மூவரையும் நாக்கை புடுங்கிற மாதிரி நயன்தாரா கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நடிகை நயன்தாரா தற்போது ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனுசை நேரில் சந்தித்து பேசுவதற்காக அவருடைய மேனேஜர் மற்றும் நண்பர்கள் மூலமாக பலமுறை நயன்தாரா முயற்சித்தும், முடியவில்லை என்றும், விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தில் எழுதிய அந்த நான்கு வரிகளை பயன்படுத்த அனுமதி கேட்டோம். தனுஷ் மேனேஜரிடம் பேசி என்னதான் பிரச்சனை என தெரிந்து கொள்ள தனுஷ் உடன் போனில் பேச வேண்டும் என நயன்தாரா ஒரே ஒரு போன் கால் தான் பேச வேண்டும் என்று எவ்வளவோ கேட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு தனுஷ் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்றும், ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தால் அதை பேசி சரி செய்து கொள்ளலாம் என்று நயன்தாரா விரும்பியதாகவும் மேலும் பெஸ்ட் பிரண்டாக இல்லை என்றாலும் எங்கேயாவது நேரில் பார்த்தால் ஹாய் எப்படி இருக்கீங்க என்று பேசுவதற்காகவாது நட்புடன் இருக்க வேண்டும் என்று நயன்தாரா எவ்வளவோ முயற்சித்தோம் அதற்கு வாய்ப்பு இல்லாமல் சென்று விட்டது என தெரிவித்த நயன்தாரா.

மேலும் வலைப்பேச்சு சேனலில் சினிமா குறித்து தொடர்ந்து பேசி வரும் அந்தணன் பிஸ்மி சக்தி ஆகிய மூவரையும் பெயரைச் சொல்லாமல் நார் நாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார் நயன்தாரா. அந்த பேட்டியில் பேசும்போது அந்த மூன்று பேரும் குரங்குகளுக்கு சமமானவர்கள் என்றும் அவர்கள் எப்போதும் என்னை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சேனலில் 50 வீடியோக்கள் இருக்கிறது என்றால் அதில் 45 வீடியோக்கள் என்னை பற்றி தான் பேசி இருப்பார்கள் என தெரிவித்த நயன்தாரா.

இதுகுறித்து அவர்கள் ஏன் என்னை இப்படி டார்கெட் செய்கிறார்கள் என்று நான் சிலரிடம் விசாரிக்க சொன்னேன். அவர்கள் விசாரித்து என்னுடைய பெயரை அவர்கள் பயன்படுத்தி வீடியோ போடுவதால் அதிக வியூஸ் வருகிறது அதோடு நிறைய பணமும் சம்பாதிக்கிறார்கள் என்று எனக்கு தெரிய வந்தது என தெரிவித்த நயன்தாரா. ஆனால் இவர்கள் பேசுவதே வேடிக்கையாக இருக்கிறது உண்மையிலே இவர்கள் வதந்திகளை பரப்பி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை பார்க்கும் பொழுது மூன்று குரங்குகள் தான் ஞாபகம் வருகிறது என பெயரைச் சொல்லாமல் பிஸ்மி அந்தணன் சக்தி ஆகிய மூன்று வலைப்பேச்சு தீமை கடும் தாக்கு தாக்கிய நயன்தாரா, கெட்டதை பார்க்காதே, கெட்டதை பேசாதே, கெட்டதை கேட்காதே என விளக்கும் அந்த மூன்று குரங்குகள் சிலை போல் இவர்கள் நேர் எதிரானவர்கள் என்றும் கெட்டதைத்தான் பார்க்கிறார்கள். கெட்டதைத்தான் பேசுகிறார்கள், கேட்டதை தான் கேட்கிறார்கள. மேலும் இவர்கள் பேசுவதெல்லாம் சீரியஸாக எடுத்து க்க கூடாது என தெரிவித்த நயன்தாரா.

அந்த மூவரில் ஒருவர் என்னுடைய வாழ்க்கை பற்றி ஒரு எபிசோடில் என்னமோ எல்லாம் தெரிந்த என்னுடைய அப்பா மாதிரி பேசி இருப்பார் என்று நயன்தாரா மூன்று குரங்குகளுடன் ஒப்பிட்டு மறைமுகமாக வலைப்பேச்சு சேனலில் சினிமா குறித்த செய்திகளை பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் போன்று பேசி வரும் வலைப்பேச்சு அந்தணன் பிஸ்மி சக்தி ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ள நிலையில்.

இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது வலைப்பேச்சு சேனலில் சினிமா குருதி புறணி பேசி வரும் அந்தணன் பிஸ்மி ஆகியோருக்கு சிலிப்பர் ஸ்டார்ட் ஆக அமைந்துள்ளது என்று கமெண்ட் செய்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here