என்கிட்ட வெச்சுகாதா… சுந்தர் சியிடம் முக்குடைபட்ட நயன்தாரா…

0
Follow on Google News

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மத கஜராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது, இந்த வெற்றியைத் தொடர்ந்து சூட்டோட சூட்டாக உடனே சுந்தர் சி அடுத்த ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என ஆயத்தமாக இறங்கினார். இந்நிலையில் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை தான் முதலில் இயக்குவதாக இருந்தது.

மேலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தயாரிப்பாளர் ஐ சரி கணேசன், இந்த படத்தின் இயக்குனர் சுந்தர்சிக்கு 20 கோடி ரூபா சம்பளம் பேசி இருந்தார், அதாவது சுந்தர் சிக்கு ஐசரி கணேசன் 20 கோடி ரூபா சம்பளம் கொடுத்ததற்கு முக்கிய காரணமே, சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அந்த வெற்றியை அடுத்து நம்ம அறுவடை செய்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்,

வெற்றி இயக்குனரான சுந்தர் சி யை பெரும் தொகை சம்பளம் கொடுத்து ஐசரி கணேசன் தன்னுடைய படத்தில் ஒப்பந்தம் செய்தார், இதனைத் தொடர்ந்து சுந்தர்சியும் உடனே படத்தை தொடங்கி விடலாம், படத்தின் கதாநாயகி நயன்தாராவிடம் டேட் வாங்குங்க என்று ஐசரி கணேசன் இடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் நயன்தாரா கால் சீட் கொடுக்காமல் ஐயோ மலையாள படத்தில் எனக்கு கமிட் மென்ட் இருக்கு.

அந்த படத்தில் கமிட்மெண்ட் இருக்கு, இந்த படத்தில் கமிட்மென்ட்க்கு நான் ரொம்ப பிசி என்று கால் சீட் கொடுக்காமல் தாமதப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார், மேலும் என்னால் ஏப்ரல் மாதம் கடைசியில தான் மூக்குத்தி அம்மன் பார்ட் 2க்கு கால் சீட் கொடுக்க முடியும் என்று நயன்தாரா தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை தொடங்குவதற்கு ஆவலோடு இருந்த சுந்தரி சி செம்ம டென்ஷனாகி, தயாரிப்பாளரிடம் சரிங்க சார் நீங்க நயன்தாரா எப்போ டேட் கொடுக்குறாங்களோ அப்போ சொல்லுங்க, நான் அடுத்த படத்தை இயக்க செல்கிறேன் என்று விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவதில் கவனத்தை செலுத்தினார் சுந்தர் சி.

இப்படி சுந்தர் சி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, ஏப்ரல் மாத கடைசியில் கால் சீட் தருகிறேன் என்று சொன்ன நயன்தாரா, சார் நீங்கள் கேட்டது போன்று மார்ச் மாதமே கால்ஷீட் தருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார், அந்த வகையில் ஆரம்பத்தில் நயன்தாரா கால் சீட் இல்லை , பிசி என்று இழுத்தடித்தால், சம்பளத்தை ஏற்றலாம் என்று நினைத்து தான் அவர்கள் கேட்ட தேதிக்கு கால் சீட் கொடுக்காமல் இழுத்து அடித்திருக்கிறார் நயன்தாரா.

ஆனால் சுந்தர் சி பரவால்ல நயன்தாரா எப்போ கால் சீட் கொடுக்கிறார்களோ அப்ப வருகின்றேன், என வேறு ஒரு படத்தை இயக்க சென்றதும், மேலும் நயன்தாராவுக்கு பெரிதாக கைவசம் படமும் இல்லை அப்படி இருக்கையில் நம்மால் எவ்வளவு நாள் தாமதப்படுத்தினாலும் நாம்தான் அவர்களை தேடி செல்ல வேண்டும், அவர்கள் நம்மளை கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்கின்ற முடிவுக்கு வந்த நயன்தாரா.

தற்பொழுது மார்ச் மாதமே கால் சீட் தருகிறேன் என்று சொன்னதும், சுந்தர் சி செம டென்சனில், இந்த அம்மா என்ன விளையாடுறாங்களா? சரி சொன்னபடி மார்ச் மாசம் கால் சீட் கொடுத்து தொடர்ந்து நடிப்பார்களா.? இல்லை பாதியிலே விட்டுட்டு நான் ரொம்ப பிஸி என்று ஓடி விடுவார்களா என்று கேட்டிருக்கிறார் சுந்தர் சி. அதற்கு தயாரிப்பாளர் இல்லை அவர்கள் தொடர்ந்து கால் சீட் தருவதாக உறுதியளித்தார் என்று சொன்னதும், தற்பொழுது சுந்தர் சி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்க இருக்கிறார், இந்த படத்தை முடித்துவிட்டு விஷாலை வைத்து அடுத்த படத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here