நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்துவிட்டு சில நாட்களில் ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று, குறிப்பாக நயன்தாரா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வைத்ததாக அமைத்ததால், தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கின்ற அடை மொழியுடன் அதிக சம்பளம் வாங்கி வந்த நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த போதே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா திருமணத்திற்கு பின்பும் கைவசம் பல படங்களை இருந்த நிலையில், ஜவான் படத்தை தவிர்த்து மற்ற எந்த ஒரு படங்களுக்கும் அவர் சொன்னது போன்று கால் சீட் கொடுக்கவில்லை.
இதனால் பல படங்களில் தயாரிப்பாளர்கள் நயன்தாராவிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கி, நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை தேர்வு செய்து வருகிறார்கள். இருந்தும் தனக்கு படவாய்ப்புகள் பறிபோகிறதே என்கிற எந்த ஒரு வருத்தமும் நயன்தாராவுக்கு இல்லை. இதற்கு காரணம் நயன்தாரா சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்கு கோடி கோடியாக வருமானம் வருவது தான் .
நயன்தாரா சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே, ஆரம்பத்தில் இருந்தே பல தொழில்களில் முதலீடு செய்ய தொடங்கினார், நயன்தாரா நடிகை , விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் கூழாங்கல் , காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வந்தனர், ஆனால் சினிமாவை தாண்டி நயன்தாரா தொழில் ரிதியாக முதலீடு செய்துள்ளார்.
மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் நயன்தாரா இணைந்து தி லிப் பார்ம் கம்பெனி என்னும் காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்திவருகிறார். இது முழுக்க முழுக்க பெண்களுக்கான லிப் ஸ்டிக்கை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் . இதன் பிராண்ட் அம்பாசிட்டராகவும் நயன்தாரா இருந்து வருகிறார். அதே போன்று ஃபிபோலா ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் இந்த நிறுவனத்திலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தென்னிந்தியாவில் பிரபலமான சாய் வாலே தேநீர் விற்பனை கடையில் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து முதலீடு செய்திருக்கின்றனர். இப்படி சில கோடியில் பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நயன்தாரா. துபாயில் தளமாகக் கொண்ட ஒரு புதிய எண்ணெய் வணிகத்தில் சுமார் 100 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் துபாயில் உள்ள எண்ணெய் வணிகத்தில் இந்த முதலீடு செய்த நயன்தாரா, தன்னுடைய துபாய் முதலீட்டை சகோதரர் பொறுப்பில் விட்டுவிட்டாராம், நயன்தாராவின் சகோதரர் ஏற்கனவே பல வருடங்களாக துபாயில் முதலீடு செய்து பெரும் லாபத்தை சம்பாரித்து வருகின்றவர், அந்த வகையில் தன்னுடைய சகோதரரின் ஆலோசனையின் படியே துபாயில் சுமார் 100 ரூபாய் முதலீடு செய்துள்ளார் நயன்தாரா.
அந்த வகையில் நயன்தாரா இது போன்று பல தொழில்களில் முதலீடு செய்துள்ள நிலையில் மாதத்திற்கு சுமார் 10 கோடிக்கு மேல் அவர் லாபம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது, அந்த வகையில் நயன்தாரா சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவருக்க கோடி கோடியாக கொட்டோ கொட்டு என கொட்டுகிறது அவர் துபாய் போன்ற நாடுகளில் முதலீடு செய்துள்ளது.