நார் நாராக கிழித்த நயன்தாரா..மீண்டும் அசிங்கப்பட்ட பீலா பிஸ்மி…

0
Follow on Google News

நயன்தாரா குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வைத்து வருகின்றவர் வலைப்பேச்சு பிஸ்மி. இந்த நிலையில் வலைப்பேச்சு சேனலில் உட்கார்ந்து சினிமா குறித்து கிசு கிசு பேசி வரும் அந்த மூவர் பெயரை குறிப்பிடாமல் குரங்குகளுடன் ஒப்பிட்டு நயன்தாரா சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டிக்கு பின் மீண்டும் நயன்தாராவை பற்றி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை விமர்சனங்களை வைத்து வருகிறது வலைப்பேச்சு குழுவினர். அதில் குறிப்பாக பிஸ்மி நயன்தாரா மீது வன்மத்தை காக்குகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு போகிற போக்கில் பல விஷயங்கள் அடித்துவிட்டு செல்கிறார்.

அந்த வகையில் நயன்தாரா அவருடைய வாழ்க்கை வரலாறை டாக்குமெண்ட்டாக எடுத்து சமீபத்தில் வெளியிட்டதில் தனுசுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் காப்பி ரைட்ஸ் பஞ்சாயத்து ஓடியது அனைவரும் அறிந்தது. ஆனால் தற்பொழுது புதிதாக ஒரு விஷயத்தை கிளப்பிவிட்டார் பிஸ்மி. அதாவது நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தில் சில கண்டன்டுகளை, நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படத்தில் பயன்படுத்தியதால் அவர்களுக்கு சந்திரமுகி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்ஷன் லீகல் நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு தகவல் பரவியது.

இது குறித்து பிஸ்மி ஒரு பேட்டியில் பேசுகையில், நயன்தாரா அவர் குறித்த டாக்குமென்ட்ரி ஃபிலிம் பல கோடி ரூபாய்க்கு நெட் பிலீக்சில் விற்பனை செய்தார். ஆனால் அந்த டாக்குமெண்ட்ரிக்குள் இருக்கும் வேறு சிலர் சொந்தமான கன்டன்டுகளுக்கு முறையான உரிமையை சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும்,

ஆனால் நயன்தாரா எதுவுமே கேட்காமல் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி இப்படி நயன்தாரா பயன்படுத்தினால் நிச்சயம் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று பேசிய பிஸ்மி, சந்திரமுகி என்கின்ற படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய பெயரை கொடுத்த படம், நயன்தாரா சந்திரமுகி படத்தில் நடிக்கவில்லை என்றால் இந்த அளவுக்கு உயரமாக வளர்ந்து இருப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி என தெரிவித்த பிஸ்மி.

அந்த வகையில் இவ்வளவு உயரத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த சந்திரமுகி படத்தில் இருந்து ஒரு கண்டன்ட்டை பயன்படுத்தும் போது அதன் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்சன் நிறுவனத்திடம் முறையாக நயன்தாரா அனுமதி பெற்று இருக்க வேண்டும் அதைக் கேட்காதது மிகப்பெரிய தவறு, இதை சட்டை ரீதியாக நயன்தாரா எதிர்கொள்ள வேண்டும் என போகிற போக்கில் நயன்தாரா மீது ஆதாரமில்லாத ஒரு குற்றசாட்டை பிஸ்மி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை அனுமதியின்றி உபயோகப்படுத்தியதாகவும் சந்திரமுகி பட நிறுவனமான சிவாஜி புரொடெக்சன் நயன்தாராவுக்கு ரூ.5 கோடி நோட்டீஸ் அனுப்பியதாக வதந்திகள் பரவியது. இந்த நிலையில் தற்போது நயன்தரா தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், சிவாஜி புரொடெக்சன் தரப்பு , சந்திரமுகி பட காட்சிகளை நயன்தரா ஆவண படத்தில் உபயோகிக்க அனுமதி அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டு.

சிவாஜி புரெடெக்சன் சார்பாக அவருடைய மூத்த மகன் ராம்குமார் கணேசன் கையெழுத்திட் ஒரு அறிக்கை வெளியாகி இணையத்தில் உலவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நயன்தாரா தரப்பு, அந்த வகையில் நயன்தாராவை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக சினிமா வட்டாரத்தில் பீலா பிஸ்மி என்று அழைக்கப்படும் பிஸ்மி பொய்யான தகவலை தெரிவித்து அசிக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here