விஜய்யை மண்ணை கவ்வவிட நயன்தாரா சபதம் … அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய நயன்தாரா…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடைசியாக அவரது நடிப்பில் உருவான டெஸ்ட் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதனால் ரூ. 50 கோடி வரை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. நயன்தாரா நடிப்பில் இப்போது சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இதற்கிடையே தெலுங்கு இயக்குனர் அனில்ரவி புடி இயக்கத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆனார். இதுதவிர மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் ஒரு படத்திலும் நயன்தாரா நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.இதில் சிரஞ்சீவி – நயன்தாரா நடிக்கும் படமும் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கிளப்பியுள்ளது.

நடிகை நயன்தாராவை பொருத்த வரை ஆரம்பத்தில் நிறைய படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். பிறகு நாயகியை மையப்படுத்திய கதைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார். கோபி நயினார் இயக்கிய அறம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. ஆனால் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான 75வது படம் அன்னபூரணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்தியில் அட்லி இயக்கிய ஜவான் படத்திலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலை குவித்த போதிலும் அடுத்தடுத்து பாலிவுட்டில் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் ஏதுமில்லை. உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி இல்ல விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பை மட்டுமே நயன்தாரா ஜவான் படம் பெற்றுத் தந்தது. மற்றபடி இந்தியில் தொடர் வாய்ப்புகள் இல்லாமல் நயன்தாரா ஏமாற்றமடைந்தார்.

அதே போன்று தமிழில் முக்குத்தி அம்மன் தவிர்த்து சொல்லும்படி ஏதும் பெரிய வாய்ப்பு நயன்தாராவுக்கு இல்லை. இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் அனில்ரவி புடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அவரது 157வது படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும் இப்போது திருமணத்துக்கு பிறகு 3வது இன்னிங்ஸ்சை தெலுங்கில் ஆரம்பித்திருக்கிறார்.

இந்த படம் வருகிற 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகும் அதே நாளில்தான் உலகம் முழுவதும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது.ஏற்கனவே நடிகர் விஜயுடன் தமிழில் சில படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்திலும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்திலும் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

மேலும் சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா கூத்து பார்க்க வாரியா என்ற பாடல் காட்சியில் விஜயுடன் நயன்தாரா குத்தாட்டம் போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக மாறிய அரசியல்வாதி விஜய் நடித்திருக்கும் கடைசி படம்தான் ஜனநாயகன். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருவதால் தெலுங்கிலும் வசூலில் சக்கைப் போடு போடும் என்று எதிர்பார்த்த நிலையில்,

விஜய்க்கு இடையூறாக சிரஞ்சீவி நயன்தாரா நடிக்கும் இந்த புதிய படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வர இருக்கிறது. விஜயை மண்ணை கவ்வ வைக்க நயன்தாராவின் இந்த முயற்சி பலிக்குமா, தெலுங்கில் ஜனநாயகனுக்கு வசூலில் ஆப்பு காத்திருக்கிறதா என்பதற்கு வரும் பொங்கல் பண்டிகை காலம்தான் பதில் சொல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here