நயன்தாரா – விக்னேஷ் சிவன் நெருக்கம்… பொறுத்து கொள்ள முடியாமல் தனுஷ் வைத்த ஆப்பு…

0
Follow on Google News

2022 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கிராண்ட் சேர்ட்டன் ஓட்டலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அப்போது அவர்களின் திருமண வீடியோக்களை, ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டு நெட்பிலிக்ஸ்க்கு, நயன்தாரா விக்னேஷ் சிவன் விற்று விட்டனர். பின்னர் நெட்பிலிக்ஸ் அவர்கள் கல்யாணத்தை ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது.

ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் இன்று வரை அதை ஒளிபரப்பவில்லை. இந்நிலையில்தான் இன்று வரை நயன் விக்கி திருமண வீடியோ வெளியிடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே நடிகர் தனுஷ் தான் என்று தெரியவந்துள்ளது. நடிகர் தனுஷும், நயன்தாராவும், யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்ததில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். ஆனால், நயன்-விக்கி காதலிக்க ஆரம்பித்ததால்தான், தனுஷ்-நயன்தாரா நட்பு பகையாக மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

நயனும் தனுஷும் நல்ல நண்பர்களாக இருந்த காலகட்டத்தில் தான், சிவகார்த்திகேயனை வைத்து, தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில், நயன் ஒரு குத்தாட்டம் போடுங்களேன் என்று தனுஷ் கேட்டதன்பேரில் தான் அவர் ஆடினார். அந்த பாடலும் செம்ம ஹிட் ஆனது. அதன்பிறகு விஜய் சேதுபதியை வைத்து, தான் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தில் நடிக்குமாறு தனுஷ் நயன்தாராவிடம் கேட்டார். நயன்தாராவோ, நண்பனுக்காக சம்பளம் பற்றி கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டார்.

நானும் ரவுடி தான் படப்பிடிப்பின்போது நயனுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. நயன் விக்னேஷுடன் நெருக்கம் காட்ட காட்ட , அவருக்கும் தனுஷுக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. தனுஷால் நயன்தாராவை சந்திக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு முறை தனுஷ் நயனை சந்திக்க வந்தபோது அங்கு விக்னேஷ் இருந்ததால் பேச முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனால் தனுஷுக்கு நயன் மீது கோபம். இந்த நயனும், விக்னேஷும் படப்பிடிப்பில் கவனம் இல்லாமல் இருந்ததால் பட்ஜெட் அதிகரித்துவிட்டது என்று தனுஷ் தெரிவித்தார். இதை கேட்டு கடுப்பான நயன் எவ்வளவு அதிகரித்ததோ அதை கூறுங்கள் நான் பணத்தை தருகிறேன் என்றார். நானும் ரவுடி தான் படம் என்னமோ ஹிட்டு தான். ஆனால் தனுஷோ படத்தால் தனக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் தான், விக்னேஷ் சிவன் தன்னுடைய கல்யாண வீடியோவில், இந்த படத்தில் உள்ள பல காதல் காட்சிகளை எடிட் செய்து இணைத்துள்ளார். அது மட்டும் இன்றி படத்தில் சேர்க்கப்படாத, ஷூட்டிங்கில் நடைபெற்ற சில சுவாரசியமான விஷயங்களையும் இணைத்துள்ளார். அப்படி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடக்கூடியதாய் அந்த வீடியோவை தயாரித்துள்ளார் விக்னேஷ் சிவன். இப்பொழுது இந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டுமென்றால் படத்தின் தயாரிப்பாளராகிய தனுஷ் அனுமதி கொடுக்க வேண்டும்.

இந்த வீடியோவில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளையும் இணைத்ததால், விக்னேஷ் சிவனுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. பலமுறை விக்னேஷ் சிவனும்-நயன்தாராவும் கேட்டும் கூட இதுவரை தனுஷ் அவர்களுக்கு அந்த அனுமதியை வழங்கவில்லை. நெட்ப்ளிக்ஸ் இதை தண்டமாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கி பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறது. தனுஷ் கையில் தான் இப்பொழுது இவர்கள் வீடியோ ஒளிபரப்பும் உரிமை இருக்கிறது.