நான் ப்ரோமோசனுக்கு வரமாட்டேன், படப்பிடிப்பில் என்னுடைய குழந்தையை பராமரிக்கும் ஆயாவிற்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்க வேண்டும், பவுன்சர்கள் வேணும் என்று பல கண்டிஷன் போடும் நயன்தாராவை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் கமிட் செய்து வருவது, நயன்தாராவை குற்றம் சொல்வதா.? அல்லது நயன்தாராவை படத்திற்கு கமிட் செய்யும் தயாரிப்பாளர்களை குற்றம் சொல்வதா.? என்கின்ற விவாதமே சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.
மேலும் நயன்தாரா நடித்த படங்களில் குறிப்பிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே கமர்சியல் வெற்றி அடைந்தது, அதுவும் நயன்தாரா ஹீரோயின் சப்ஜெக்ட்டாக கதாநாயகி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடிப்பில் வெளியான படங்களில் இரண்டு படங்கள் தவிர்த்து மற்ற அனைத்துமே தோல்விதான். மேலும் நயன்தாராவை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலரும் அட்ரஸ் இல்லாமல் சென்று விட்டார்கள் என்பது தான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலவரம்.
நடிகை நயன்தாராவை முன்னிலை படித்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களான O2 என்கின்ற படத்தை எடுத்த இயக்குனர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நயன்தாரா நடித்த அறம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தாலும் கூட அந்த படத்தின் இயக்குனர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இப்படி நயன்தாராவை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் பலரும் அட்ரஸ் இல்லாமல் சென்று விட்டார்கள்.
அப்படி இருக்கையில் நயன்தாரா அவரே லேடி சூப்பர் ஸ்டார் என்று ஒரு போலியான பிம்பம் கட்டமைக்கப்பட்டு மக்களை ஏமாற்றலாம். ஆனால் சினிமா துறையில் இருப்பவர்களும் கூட நயன்தாராவுக்காக கட்டமைக்கப்பட்ட போலி பிம்பத்தை உண்மை என்று நினைத்து, தொடர்ந்து நயன்தாராவை படத்தில் கம்மிட் செய்து வருவது தான் மிகப்பெரிய கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.
குறிப்பாக நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி என்கின்ற படத்தின் லாப நஷ்டம் கதையை தெரிந்து கொண்ட எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் நயன்தாராவை வைத்து நிச்சயம் படம் எடுக்க மாட்டார்கள். அதையும் மீறி அவர்கள் நயன்தாராவை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால், அவர்கள் தெரிந்தே பாதாள குழியில் விழுகிறார்கள் என்று தான் அர்த்தம்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின்பு தான் தொடர்ந்து பல சர்ச்சைகள் சிக்கி வருகிறார், அந்த வகையில் விக்னேஷ் சிவனால் நயன்தாராவுக்கு பிரச்சனையா.? அல்லது நயன்தாராவால் விக்னேஷ் சிவனுக்கு பிரச்சனையா.? என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில் விக்னேஷ் சிவன் சொல்வதை நயன்தாரா ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும்.
குறிப்பாக தனுஷ் விவாரத்தில் கூட விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் இதெல்லாம் வேண்டாம் என்று தான் தெரிவித்ததாகவும், ஆனால் நயன்தாரா கேட்க வில்லை என கூறப்டுகிறது. அதாவது தனுஷ் விவகாரத்தில் நான் எவ்வளவோ சொல்லியும் என்னுடைய மனைவி நயன்தாரா எதையும் கேட்கவில்லை என்று தன்னை ஒரு பொருட்டாகவே நயன்தாரா கருத மாட்டார் என்று தன்னுடைய நண்பர்களிடம் புலம்பி தவித்து வருகிறார் விக்னேஷ் சிவன் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் ஒரு தமிழ் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சியில் புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரம் மாதிரி நயன்தாரா புருஷன் என்கின்ற ஒரு அடையாளத்துடன் மட்டுமே விக்னேஷ் சிவனின் வாழ்க்கை உள்ளது என்று சினிமாத்துறையை சேர்ந்த பலரும் கிண்டல் செய்து வருவது குறித்து உங்கள் கருத்துக்கள் கமெண்ட் செய்யுங்கள்