நயன்தாரா சினிமாவில் நடிக்க வந்ததில் தொடங்கி அவருடைய திருமண வரை தற்பொழுது வெளியாகி உள்ள நயன்தாராவில் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இதில் நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவமும் காட்டப்பட்டுள்ளதா என்றால் நிச்சயம் இல்லை. பல சம்பவங்கள் இதில் மறைக்கப்பட்டுள்ளது. காரணம் நயன்தாரா அந்த விஷயங்கள் எல்லாம் சொல்வதை தவிர்த்து இருக்கலாம்.
இதில் மேலோட்டமாக பல விஷயங்களை மிக போல்டாக தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. அதாவது நயன்தாரா தன்னுடைய வாழ்க்கையில் திருமணத்திற்கு பின்பு நடிக்க கூடாது, நீ வீட்டிலே தான் இருக்க வேண்டும் என்று நயன்தாரா காதல் வயப்பட்ட ஒருவர் தெரிவித்தார் என நயன்தாரா பேசுவது, அது வேறு யாருமில்லை பிரபுதேவா தான், அந்த வகையில் பிரபுதேவா பெயரைச் சொல்லாமல் மறைமுகமாக அவரைத்தான் தெரிவிக்கிறார் என்பது இதை பார்க்கின்ற அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் நயன்தாரா யாரை காதலித்தாலும் ஒவ்வொரு முறையும் அந்த நபரை தன்னுடைய தாயாரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்வார். அப்படித்தான் யாரடி மோகினி படத்தின் போது தனுஷை அழைத்துக் கொண்டு தன்னுடைய தாயாரிடம் தனுஷை அறிமுகம் செய்து வைத்துள்ளார் நயன்தாரா. ஆனால் தனுஷை நயன்தாரா தன்னுடைய நண்பராக அறிமுகப்படுத்தினாரா.? அல்லது எந்த மாதிரி அறிமுகப்படுத்தினார் என்பது நயன்தாரா – தனுஷ் இருவருக்குமான விஷயம்.
ஆனால் அந்த காலகட்டத்தில் நயன்தாரா – தனுஷ் இருவருக்கும் இடையில் மிக பெரிய அளவில் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா – தனுஷ் இருவரும் நடித்த யாரடி நீ மோகினி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி. இதனை தொடர்ந்து அப்போது நயன்தாரா வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடந்து இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் தனுஷ். இந்த பார்ட்டியில் நயன்தாரா அழைப்பின் காரணமாகவே தனுஷ் கலந்து கொண்டுள்ளார்.
தனுஷ் உடன் யாரடி மோகினி படத்தின் இயக்குனரும் சென்றிருக்கிறார், அவர்கள் இருவருக்கும் நயன்தாரா மிகப்பெரிய விருந்து வைத்து தனுஷின் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, யாரடி மோகினி படம் மிக பெரிய வெற்றி உனக்கு என்ன வேண்டும் என நயன்தாராவிடம் தனுஷ் கேட்டிருக்கிறார். அதற்கு நயன்தாராயாரடி மோகினி படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது பற்றி இதற்கு எனக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.?
நான் கேட்பதை நீங்கள் செய்வீர்களா என்று நயன்தாரா பதிலுக்கு தனுஷிடம் கேட்க , நிச்சயம் செய்வேன் என்று தனுஷ் உறுதி கொடுக்கிறார். யாரடி மோகினி படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் ஒரு பைக் வாங்கி தாருங்கள் என்று நயன்தாரா தெரிவிக்க, அடுத்த நாளே தனுஷ் அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் ஒரு பைக்கை வாங்கி கொடுத்திருக்கிறார்.
இந்த இடத்தில் தான் இன்றும் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாராவை ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியவரும், மற்ற நடிகையாக இருந்தால் எனக்கு கார் வாங்கி கொடுங்க எனக்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுங்க என்று தெரிவித்து இருப்பார்கள். ஆனால் நயன்தாரா உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கித் தாங்க என ரியல் லேடி சூப்பர் ஸ்டாராக நடந்து கொண்டார் என்பது அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் தெரியும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.
இப்படி நயன்தாரா – தனுஷ் இருவருக்கும் இடையில் இருந்து பழக்கம் பற்றி சமீபத்தில் வெளியன் நயன்தாரா ஆவன படத்தில் இடம்பெற வில்லை. மேலும் பிரபுதேவாவை மறைமுகமாக சொன்ன அளவுக்கு கூட நயன்தாரா வாழ்க்கையில் மிக முக்கியமான நபரான சிம்பு குறித்து ஆவன படத்தில் இடம்பெறாதது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.