தென்னிந்திய நடிகைகளில் நம்பர் ஒன் யார் என்றால் அனைவரும் யோசிக்காமல் சொல்லும் ஒரு பெயர் நயன்தாரா தான். மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான். ஆனால் இதிலும் நயன்தாரா, ஒரு உள்ளடி வேலை பார்த்து வருவது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. கோலிவுட் படங்களில் நடிப்பதை தாண்டி சமீபத்தில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட் வரை நடித்தவர் தான் நயன்தாரா.
தற்போதும் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஒரு படம் நடிக்க 10 முதல் 12 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன்தாரா தான் மலையாள படங்களில் பாதி சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு நடிக்கிறார். இது தமிழ் திரைத்துறையினரிடம் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நயன்தாராவின் தாய் மொழி மலையாளம் என்பதால் மலையாள படங்களுக்கு இந்த சலுகையா? என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் தன்னை வாழ வைத்த தமிழ் திரை உலகிற்கு இப்படி ஒரு ஓரவஞ்சனை செய்யலாமா என்பதே பலரது ஆதங்கமாக உள்ளது. மேலும் ஒரு சில படங்கள் வெற்றி பெற்று விட்டாலே தங்களின் சம்பளத்தை பல கோடிக்கு உயர்த்துவது போன்ற கலாச்சாரம் மலையாள சினிமாவில் கிடையாது.
அங்கு முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் மம்மூட்டி போன்றவர்களே 10 கோடி, 20 கோடி சம்பளம், தான் நடிக்கும் படத்திற்கு ஏற்ப வாங்குகிறார்கள். எனவே தமிழ் சினிமா போல் நயன்தாராவால் அங்கே அதிக சம்பளம் கேட்டு வாலாட்டவும் முடியாது. கூடுதலாக தான் வாங்கும் சம்பளத்தை தாண்டி நயன்தாராவின் உதவியாளர்கள் முதல் தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாக்கள் வரை அனைவரது சம்பளத்தையும் சேர்த்து தயாரிப்பாளர் இடம் பில் போட்டு வாங்கி விடுகிறார்.
நயன்தாரா இதுபோன்று மலையாள சினிமா தயாரிப்பாளர்களிடம் கேட்க முடியுமா? அல்லது அவர்கள் தான் கொடுத்து விடுவார்களா? என்ற கேள்விகள் தமிழ் தயாரிப்பாளர்களிடம் எழுதியுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனைக்கு காரணமே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். புது நடிகர்களின் ஒன்று இரண்டு படங்கள் வெற்றி பெற்று சற்று புகழ்பெற்று விட்டாலே அவர்களிடம் தாமாக சென்று அதிக அட்வான்ஸ் தொகையை கையில் கொடுத்து புக் செய்து விடுவது,
மேலும் ஆடியோ வெளியீட்டு விழா இசை வெளியீட்டு விழா என எதுவாயினும் அந்த படத்தின் நடிகர் நடிகைக்கு துதி பாடுவது, சில கோடிகள் மட்டுமே வாங்கி நடித்த நடிகர்களுக்கு பல கோடி பணத்தை கொடுத்து அவர்கள் மார்க்கெட் ரேட் ஏற்றி விடுவது என கடந்த காலத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் செய்த தவறுக்கு தான் இன்று அனுபவிக்கிறார்கள்.
ஆனால் மலையாள சினிமா அப்படி கிடையாது அங்கு நடிகர் நடிகைகளின் சம்பளம் குறைவாக இருக்கும், படம் எடுப்பதற்காகவும் தயாரிப்பு செலவுதான் அதிகமாக இருக்கும். அதனாலேயே கம்மி பட்ஜெட்டில் பல நல்ல படங்களை அவர்களால் கொடுக்க முடிகிறது. நயன்தாராவின் இத்தகைய ஓரவஞ்சனை மிக்க செயலை பார்த்த பின்பாவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் திருந்தி நடிகர்களின் சம்பளத்திற்கு ஒரு வரம்பு வைத்து திரைப்படத்துறையை சீரமைக்க வேண்டும்.
அதை செய்ய தவறினால் இன்று நயன்தாரா செய்வதை போல் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என சம்பளத்தை அவர்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி தான் கேட்பார்கள். 100 கோடிக்கு ஒரு படம் தயாரித்தால் அதில் 80 கோடி வரை அதில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளின் சம்பளமே உள்ளது. இந்த நிலை மாறும் போது தான் தமிழ் சினிமா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி நல்ல நல்ல படங்களை நாம் திரையில் காண முடியும்.