வங்கக்கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயலின் விளைவாக சென்னை உள்ளிட்ட அதைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இரண்டு நாட்கள் இடைவிடாது பெயர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இப்படியான நிலையில், நடிகை நயன்தாரா வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறேன் என்ற பெயரில் தன்னுடைய பிசினஸை ப்ரோமோஷன் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
நடிகை நயன்தாரா இயக்குனர் ஹரியின் ஐயா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அப்போது முதல் இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு வரும் நயன்தாரா, அடுத்தடுத்து வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு எனக்கு நான் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார்.
மேலும் திருமணம் ஆகி நான்கு மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்ட இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இருவருக்கும் உயிர் உலகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர், அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தனர்.
இப்படி தனக்கென ஒரு அழகான குடும்பத்தை உருவாக்கிக் கொண்ட நயந்தாரா, திருமணத்திற்கு பின்பும் வரிசையாக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டு, அடுத்த படத்தை இயக்குவதற்காக தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்.
இவ்வாறு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணத்திற்கு பின்னர் தங்களது சினிமா கரியரில் கண்ணும் கருத்துமாக இருந்து வரும் அதே சமயத்தில், சில பிசினஸ்க்களையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, லிப் பாம் கம்பெனியை நடத்தி வந்த நயன்தாரா, சமீபத்தில் 9 ஸ்கின் என்ற ஸ்கின் கேர் ப்ராடக்ட் ஒன்றை வெளியிட்டு புதிய பிசினஸ்சை தொடங்கினார்.
அந்த பிசினஸ் அமோகமாக வெற்றி பெறவே, அடுத்த பிசினஸிலும் களம் இறங்கி விட்டார். அதுதான் ஃபெமி 9 என்ற நாப்கின் பிசினஸ். இவ்வாறு சினிமாவை தவிர்த்து, நிறைய பிசினஸை தொடங்கியுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர், சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அசத்தியுள்ளனர்.
வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வெளியே செல்ல முடியாமல் தவித்திருக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய நயன்தாரா அதில் தனது கம்பெனி தயாரிப்பான Femi 9 நாப்கின் பாக்கெட்டையும் சேர்த்து வழங்கியுள்ளார். இதனால் பெண்கள் பலரும் நயன்தாராவை பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் சிலர் இவ்வளவு உதவி வழங்கும் நயன்தாரா, அவற்றை ஏன் தன்னுடைய பிராண்ட் பெயர் ஒட்டிய வண்டியில் கொண்டு வந்து மக்களுக்கு வழங்க வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் கூட தனது பிசினஸ் வளர வேண்டும் என்பதற்காக இப்படி செய்யலாமா என்று நயன்தாராவை விமர்சித்து வருகின்றனர். இன்று இவ்வாறு விமர்சிக்கப்படும் நயன்தாரா, அவரது திருமணத்தின் போது சுமார் ஒரு லட்சம் ஏழை எளிய மக்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்த அன்னபூரணி என்பது பலருக்கும் நினைவில்லை போல.