நயன்தாரா குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வைத்து வருகின்றவர் வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன் . இந்த நிலையில் வலைப்பேச்சு சேனலில் உட்கார்ந்து சினிமா குறித்து கிசு கிசு பேசி வரும் அந்த மூவர் பெயரை குறிப்பிடாமல் குரங்குகளுடன் ஒப்பிட்டு நயன்தாரா இதற்கு முன்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டிக்கு பின் மீண்டும் நயன்தாராவை பற்றி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை விமர்சனங்களை வைத்து வருகிறது வலைப்பேச்சு குழுவினர். அதில் குறிப்பாக பிஸ்மி நயன்தாரா மீது வன்மத்தை காக்குகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு போகிற போக்கில் பல விஷயங்கள் அடித்துவிட்டு செல்கிறார்.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் முக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பில், ஓவர் அட்டூழியம் செய்வதாகவும், அதனால் சுந்தர் சி, ஒரு கட்டத்தில் நயன்தாராவை தூக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது, மேலும் படப்பிடிப்பில் உதவி இயக்குனரை கடுமையாக நயன்தாரா திட்டியதாக வலைப்பேச்சு குழுவினர் போகிற போக்கில் நயன்தாரா மீது குற்றசாட்டுகளை வைத்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் சி, யிடம் முக்குத்தி அம்மன் பட குழுவுக்கு , நயன்தாராவுக்கு இடையில் பிரச்சனை நடந்ததாக செய்திகள் வெளியானது, அந்த செய்தி எதனால் வெளியானது என சுந்தர் சியிடம் கேள்வி எழுப்ப பட்டது, அதற்கு சுந்தர் சி, செய்திகளில் வெளியானது போன்று எந்த பிரதச்சனையும் இல்லை என தெரிவித்த சுந்தர் சி.
மேலும் முக்குத்தி அம்மன் படம் முதலில் பொள்ளாச்சியில் நடத்த தான் திட்டமிடப்பட்டது, ஆனால் சென்னையில் பட வேலைகள் இருந்தது, அதனால் தான் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு வேண்டாம் என சென்னையிலே நடத்தப்பட்டது என தெரிவித்தார் சுந்தர் சி. அதாவது இதற்கு முன்பு பொள்ளாச்சியில் மூக்குத்தி அம்மன் படத்தின் படபிடிப்பு நடந்த திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் நயன்தாரா தன்னுடைய இரண்டு குழந்தைகள் சென்னையில் இருப்பதால், தினமும் குழந்தைகளை பார்க்க வேண்டும் அதனால் சென்னையில் தான் படப்பிடிப்பு நடந்த வேண்டும் என பிடிவாதமாக இருந்ததால், பொள்ளாச்சியில் நடக்க வேண்டிய முக்குத்தி அம்மன் படம் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது என வலைப்பேச்சு பிஸ்மி குரூப் பேசி இருந்தது.
ஆனால் அதெல்லாம் பொய் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார் சுந்தர் சி. மேலும் தொடர்ந்து பேசிய சுந்தர் சி. நயன்தாரா ரொம்ப டெடிகேட்டான ஒரு நடிகை என்றும், படப்பிடிப்பில் ஒரு அரை மணி நேரம் கேப் இருந்தால் நான் அவரை கேரவான் போகச் சொல்வேன். ஆனால் லொக்கேஷனில் தான் இருப்பார். படப்பிடிப்பில் சன்டை காட்சிகள் படமாக்கப்படும் போது, தூசி, புழுதி பறக்கும், இருந்தாலும் அவர் லொகேஷனில் தான் இருப்பார் என தெரிவித்த சுந்தர் சி.
நயன்தாரா காலையில் லொக்கேஷன் வந்தால் மாலை ஷூட் முடிவது வரை அவர் செட்டில்தான் இருப்பார். நான் பேக் ஆப் சொன்னால் மட்டுமே நயன்தாரா கிளப்பி செல்வார் என சுந்தர் சி பேசி இருப்பது நயன்தாரா குறித்து இதுவரை வலைப்பேச்சு என்கிற யூ ட்யூப் சேனலில் அமர்ந்து பிஸ்மி, அந்தணன் ஆகியோர் தொடர்ந்து நயன்தாரா போன்று ஒரு டெடிகேஷன் நடிகை மீது பல குற்றசாட்டுகளை முன் வைப்பது, நயன்தாரா இமேஜை டேமேஜ் செய்யும் நோக்கில், இவர்களுக்கு நயன்தாரா மீது இருக்கும் தனிப்பட்ட வன்மமாக கூட இருக்கலாம் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.