நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருந்த விடாமுயற்சி படம் மிக பெரிய சிக்கலில் சிக்கி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்த பொழுதையே தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு அளித்த நடிகர் அஜித்.
அந்த படத்திற்கான அனைத்து வேலைகளையும் தயார் செய்து வைக்கும்படி விக்னேஷ் சிவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், கதை பிடிக்கவில்லை என கடைசி கட்டத்தில் இயக்குனரை மாற்றிவிட்டார் அஜித். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட்டானார்.
நயன்தாரா எவ்வளவோ பேசியும் விக்னேஷ் இவனுக்கு கொடுத்த வாய்ப்பை தட்டி பிடிங்கி விட்டார் நடிகர் அஜித். இதனால் விக்னேஷ் சிவன் சினிமா கேரியரே முடிவுக்கு வந்து விட்டது என்றே சொல்லும் அளவுக்கு விக்னேஷ் சிவன் மீண்டும் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டான நடிகர் அஜித், அந்த படம் தொடங்கியது முதலே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
பொதுவாகவே அரபு நாடுகளில் வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கும், அதிக காற்று வீசினால் அந்தப் பாலைவனத்தில் மணல் காற்று வீசப்படும், கடும் குளிர் காரணமாக பணி விழுவதெல்லாம் மிக மிகக் குறைவு. இந்நிலையில் விடாமுயற்சி படத்தை முதலில் சார்ஜாவில் எடுத்து முடித்துவிட்டு சில காட்சிகளை சென்னையில் எடுக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் திடீரென அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த தொடன்கினார்கள் பட குழு.
அஜித்தின் நேரமோ என்னமோ தெரியவில்லை விடாமுயற்ச்சி படம் தொடங்கியது முதலே இயற்கை அந்த பட குழுவிற்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் அஜர்பைஜானில் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். அவ்வப்போது மணல் காற்று வீசுவதால், புழுதி பறக்க படப்பிடிப்பு தடைபட்டது . மேலும் அஜர்பைஜானில் பனி பெய்து வருவது முற்றிலுமாக விடாமுயற்ச்சி படம் சில காலம் தடைபட்டு நின்றது.
இடைவெளி விட்டு இடைவேளை விட்டு படபிடிப்பை நடத்தி வந்ததால் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் செலவு ஏற்பட்டது. ஒரு வழியாக படப்பிடிப்பு முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்து, தற்பொழுது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை விடாமுயற்சி. இப்படி விடா முயற்சி சிக்கலில் சிக்கி தவித்து வருவதற்கு காரணம் நயன்தாராவின் சாபமே என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகர் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்று இவ்வுலகிற்கு தெரிந்த பின்பு, மேலும் அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கின்ற கூடுலும் தகவலும் வெளியான நிலையில், கதை சரியில்லை என விக்னேஷ் சிவனை அஜித் வெளியேற்ற முடிவு செய்த போது நயன்தாராவே நேரடியாக அஜித்தை பலமுறை தொடர்பு கொண்டு விக்னேஷ் சிவனை வெளியேற்றுவது பற்றி மறு பரிசீலனை செய்யுங்கள் என கேட்டுள்ளார்.
மேலும் உங்கள் கையில் தான் விக்னேஷ் சிவன் சினிமா கேரியரே அடங்கியுள்ளது என்று அஜித்திடம் எவ்வளவோ நயன்தாரா கெஞ்சி கேட்டும் அஜித் செவி சாய்க்கவில்லை, இதனால் நயன்தாராவின் சாபம் தான் என்று விடா முயற்சி தொடங்கியது முதல் சிக்கலில் சிக்கி வந்தது மட்டுமில்லாமல், ரிலீஸ் செய்ய முடியமால் தடுமாறி கொண்டிருக்கிறது என கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.