நயன்தாரா – தனுஷ் இருவருடைய விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது நயன்தாரா – தனுஷ் பிரச்சனை. நயன்தாரா அவருடைய வாழ்க்கை வரலாறை டாக்குமெண்டரியாக எடுத்து netflix நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். அதில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தின் கிளிப்பிங் தனுஷ் அனுமதியின்றி பயன்படுத்தியது மிகப்பெரிய சிக்கலில் ற்பொழுது நயன்தாராவை சிக்க வைத்துள்ளது.
தனுசுக்கும் நயன்தாராவுக்கும் நீண்ட வருடமாகவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், நடிகர் தனுஷ் நானும் ரவுடிதான் படத்தின் நயன்தாராவுக்கு தேவையான அந்த கிளிப்பிங்சை தருவதற்கு தனுஷ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் தனுஷின் அனுமதி இல்லாமலேயே நயன்தாரா அவருடைய டாக்குமெண்டரி படத்தில் அந்த கிளிப்பிங்கை பயன்படுத்தியது து மட்டுமல்லாமல்.
அந்த டாக்குமென்டரி படம் வெளியாவதற்கு முன்பு பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டு தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து தனுஷின் கோபத்திற்கு ஆளானார் நயன்தாரா. அதாவது தனுஷ் அனுமதியின்றி அவருடைய தயாரிப்பில் இடம்பெற்ற சில காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியது மட்டுமின்றி அவருடைய டாக்குமென்ட்ரி படத்தின் விளம்பரத்திற்காக தனுஷ் மீது பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தனுஷ் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
நயன்தாராவா.? நானா ஒரு கை பார்த்து விடுவோம் என்று, தனுஷ் நயன்தாராவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு இரண்டு நாட்களில் தீர்ப்பு வர இருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு நயன்தாராவுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது தனுசுக்கு சாதகமாக இருக்குமா என்ற விவாதம் அனல் பறந்து வருகிறது. தனுஷ் தனக்கு பத்து கோடி இழப்பீடு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில்,
நயன்தாராவுக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வந்து தனுஷின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால், தனுஷ் உச்ச நீதிமன்ற வரை இந்த வழக்கை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நயன்தாராவின் திமிறை அடக்காமல் விடமாட்டேன் என்று தனுஷ் சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னுடைய அனுமதியின்றி என்னுடைய தயாரிப்பில் இடம் பெற்ற படத்தின் காட்சிகளை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், என்னை இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய அயோக்கியன் போன்று சித்தரிப்பதற்கு பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட நயன்தாராவின் முகத்திரையை கிழித்து, அவருக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்பதில் தனுஷ் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்பொழுது நயன்தாராவுக்கு எதிராக தொடுத்த வழக்கில் தனுசுக்கு சாதமாக தீர்ப்பு வரவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் உடனே இந்த வழக்கை எடுத்துச் செல்வதற்கு அனைத்து வேலைகளையும் தயார் செய்யுங்கள், என்று அவருடைய வழக்கறிஞர்களுக்கு தனுஷ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இந்த விவகாரத்தில் நயன்தாரா தப்பிக்க வேண்டுமென்றால் தனுஷ் மனது வைத்தால் மட்டுமே முடியும். காரணம் தற்பொழுது காப்பிரைட்ஸ் தொடர்பான சட்டங்கள் கடுமையாக இருப்பதால் இந்த வழக்கை பொருத்தமாட்டிலும் நயன்தாராவிற்கு சாதகமாக தீர்ப்பு வருவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.